மூங்கிலரிசி அல்வா / Bamboo Rice Halwa

நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை விளையும் அற்புதமான அரிசி இந்த மூங்கிலரிசி. இதனில் சுவையான சத்தான அல்வா தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ள உடல் பலப்படும். தேகம் உறுதியாகும்.

மூங்கிலரிசி பற்றி சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ள – மூங்கில் அரிசி.

உடலுக்கு ஆரோக்கியத்தையும் பலத்தையும் அளிக்கும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசியில் எளிமையாக தயாரிக்கக்கூடிய மூங்கிலரிசி அல்வா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. வெள்ளை சர்க்கரையை தவிர்த்து நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தைக் கொண்டு தயாரிக்க கூடுதல் இரும்புச்சத்தையும் பெறலாம்.

This image has an empty alt attribute; its file name is bamboo-rice-moongilarisi-in.jpg

தேவையான பொருட்கள்

  • ½ கப் மூங்கிலரிசி
  • ¼ கப் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம்
  • ¼ கப் தேங்காய் துருவல்
  • ஏலக்காய் தூள்
  • 5 முந்திரி பருப்பு
  • 5 உலர் திராட்சை
  • பசு நெய் 

செய்முறை

  • முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். 
  • நாட்டுசர்க்கரையாக இருந்தால் அப்படியே எடுத்துக்கொள்ளலாம், வெல்லமாக இருந்தால் முதலில் அதனை தூளாக்கிக்கொள்ளவும்.
  • மூங்கிலரிசியை சுத்தம் செய்து ஒருமணிநேரம் ஊறவைக்கவும்.
  • பின் அதனை நன்கு அரைத்துக்கொள்ளவும். 
  • அடுப்பில் வாணலியை வைத்து, சிறிதளவு நீர் ஊற்றி வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரையை அடுப்பில் வைத்து பாகு தயார்செய்யவும். 

  • வெல்ல பாகுடன் அரைத்த மூங்கிலரிசி, தேங்காய் துருவல்  சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும்.
  • நன்கு கொதிவந்ததும் சிறிது சிறிதாக பசுநெய்யினை சேர்த்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். 
  • அதனுடன் முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். 

  • கைவிடாமல் கிண்டிக்கொண்டே இருக்க நன்கு வெந்து நல்ல மணத்துடன் நிறம் மாறி திரண்டு ஹல்வா பதத்திற்கு கெட்டியாக வந்துவிடும். 
  • சுவையான மூங்கிலரிசி ஹல்வா தயார். எல்லா வயதினருக்கும் ஏற்றது. 

மூங்கிலரிசி அல்வா

நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை விளையும் அற்புதமான அரிசி இந்த மூங்கிலரிசி. இதனில் சுவையான சத்தான அல்வா தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ள உடல் பலப்படும். தேகம் உறுதியாகும்.
ஆயத்த நேரம் : – 1 hour
சமைக்கும் நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 1 hour 30 minutes
பரிமாறும் அளவு : – 3

தேவையான பொருட்கள்

  • ½ கப் மூங்கிலரிசி
  • ¼ கப் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம்
  • ¼ கப் தேங்காய் துருவல்
  • ஏலக்காய் தூள்
  • 5 முந்திரி பருப்பு
  • 5 உலர் திராட்சை
  • பசுநெய் 