sweating in tamil, sweating is good for health, sweating in body, Reasons for excexx sweating, sweating in underarms

வியர்வை

வியர்வை துர்நாற்றத்தை மறைக்க இரசாயன அழகுசாதனப் பொருட்கள் அவசியமா?

பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஆனைத்து பாலுட்டிகளுக்கும் வியர்வை பொதுவானது. இன்று பெரும்பான்மையனவர்கள் உடல் வியர்வையை வெளியேற்றுவதே இல்லை. இவை நாளடைவில் மன உளைச்சலையும், உடல் ஆரோக்கியத்தையும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்கி புற்று நோய் ஆபத்து வரை பலரை கொண்டு செல்கிறது.

எப்போதும் செயற்கை ரசாயன பூச்சுகளும் செயற்கை குளிர் காற்றும் (குளிர்சாதன அரை) என உள்ளிருக்கும் கழிவுகளை பாதுகாப்பாக உள்ளேயே வைத்துக்  கொண்டிருக்கிறோம்.

sweating in tamil, sweating is good for health, sweating in body, Reasons for excexx sweating, sweating in underarms

இதனால் வியர்வை வெளியேறுவதில் சிரமம் ஏற்படுகிறது. வியர்வை உடலிலேயே கழிவுகளாக தேங்குகிறது.

எதற்காக வியர்வையில் துர்நாற்றம்

வியர்வை உடலை சமநிலையில் வைப்பதற்கும், நைட்ரஜன், எண்ணெய் கழிவுகளை வெளியேற்றவும் தான்.

வியர்வைக்கு பல காரணங்கள் இருப்பது பொதுவானது. உடலில் எதாவது நோய் இருப்பது, உடல் சுத்தம் இல்லாது இருப்பது, பரபரப்பு, மலச்சிக்கல் மற்றும் திடீர் உடல் உபாதைகள் போன்றவை முக்கிய காரணங்களாகும்.

பொதுவாக திடீர் உடல் உபாதைகளால் பெருமளவில் பதிப்புகள் இல்லை, இது ஒரு சாதாரண உடல் செயல்பாடு. ஆனால் வியர்வையில் துர்நாற்றம் என்பது சாதாரண செயல்பாடு இல்லை, அதை கவணிக்க தவறினால் நாள்பட்ட வியாதிகளுக்கு அதுவே காரணமாகும்.

வியர்வை துர்நாற்றத்திற்கு மிக முக்கிய காரணம் சீராண உணவுப்பழக்கம் இல்லாதது மற்றும் சீராண கழிவு நீக்கம் இல்லாதது. இவற்றை மறைக்க இரசாயன சோப்புகளும், வாசனை திரவங்களும் பயன்படுத்துவது மேலும் மேலும் உடல் கழிவுகளை உடலிலேயே அடைத்துவைக்கிறது. சருமம் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு சரும புற்று நோய்க்கும் வழிவகுக்கிறது.

வயிற்றில் ஏற்படும் ஜீரணக் முறைகேடே வியர்வை துர்நாற்றத்திற்கு முதல் காரணம். ஜீரணம் முதலில் தொடங்கும் இடம் வாய் அதனுடன் சேர்ந்த உமிழ்நீரும்.

உணவின் ஒவ்வொரு குறிப்பிட்ட சுவையும் உடலின் உறுப்புகளுக்கு சக்தி அளித்து அந்த உறுப்பை சீராக இயக்க புத்துணர்வூட்டுகிறது. ஆனால் அன்றாடம் நாம் உண்ணும் உணவின் சுவையை பிரிக்காமல் (சுவைக்காமல்) அதிக பசி மற்றும் நேரமின்மை காரணமாக உணவை விழுங்கி விடுகிறோம். 

இவ்வாறு ஜீரணத்திற்கு உதவும் உமிழ்நீருடன் கலக்காத உணவு வயிற்றில் நேரடியாக தள்ளும் போது வயிறு, மண்ணீரல் போன்ற உறுப்புகள் உணவின் சக்தியை முழுமையாக கிரகிக்க கூடிய ஆற்றலை இழக்கிறது. இதனால் உடலின் ஜீரண சக்தியும் குறைகிறது. அதுமட்டும் இல்லது சுவைக்காக என்று கருதி பலர் தேவையற்ற மசாலாப்பொருட்களை சேர்த்து உணவை சமைத்து உண்ணுகின்றனர். இதுவோ ருசியை உணரும் நாக்கின் சுவை முட்டுக்களை பாதிக்கின்றன. இதனால் சுவை அறியாது உடல் தன் உணவை செம்மையாக கிரகிக்கும் சக்தியை இழக்கிறது. இவ்வாறு முறைகேடாக ஜீரணிக்கப்பட்ட உணவே வயிற்றில் இருந்து மண்ணீரலால் கிரகிக்கப்படுகிறது. இந்த உணவைச் சக்தியானது இரத்தத்தில் கலந்துள்ள பிராணவாயுவின் உதவியால்தான் உயிரோட்டம் பெறுகிறது.

மண்ணீரல் இயக்கக் கேட்டால் பிராணவாயு குறைவான கெட்ட இரத்தம் சுற்றுப் பெற்றுக் கொண்டிருக்கும் போது அவையே உணவுச் சத்துக்களாகவும் மாறுகிறது. கெட்ட உணவுச் சத்துக்கள், பிராணவாயு போதுமான அளவில் இல்லாததால், உடல் திசுக்களால் உபயோகப் படுத்தப்படாமல் ஊளைச் சத்துக்கள், சதைகளாக திசுக்களிலேயே தேக்கம் அடைகின்றன. இந்த ஊளைச் சதை, இடுப்பை சுற்றிலும், அடி வயிற்றிலும் அதிகமாகத் தங்குகின்றன.

sweating in tamil, sweating is good for health, sweating in body, Reasons for excexx sweating, sweating in underarms

மேலும் தொடையிலும், தடைப் பகுதியிலும் கெட்ட நீர் தேங்க ஆரம்பிக்கின்றன. இதைத் தொடர்ந்து இக் கெட்ட உணவு சத்துக்கள் தோலின் அடியில் பரவலாக படிய ஆரம்பிக்கின்றன. தோலில் இவ்வகையாகக் கெட்ட நீர், ஊளை சதை தாங்கும் போது வியர்வையில் துர்நாற்றம் அடிக்கத் தொடங்குகிறது.  

பெண்களுக்கு இந்த கெட்ட நீரும், ஊளை சதையும் மார்பகத்திலும், சினைப்பையைச் சுற்றியுள்ள கொழுப்புப் பாகங்களிலும் அதிகமாக தங்குகின்றன. நாளடைவில் இது மார்பக புற்றுநோயாகவோ அல்லது கர்பப்பை புற்றுநோயாகவோ மாறக் கூடிய வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த துர்நாற்றத்தினால் பவுடர்களையும், வாசனை திரவங்களையும் அதிகம் உபயோகிக்கின்றனர். இதனால் பதிப்புகளை நாமே அதிகப்படுத்திக் கொள்கிறோம், இவற்றின் இரசாயனத் தன்மையினால் தோல் புற்று நோய்க்கும் தோல் வியாதிகளுக்கும் நாமே  வழி வகை செய்கிறோம். 

மேலும் சீராண உணவு ஜீரணம் இல்லாதது தொடர மலச்சிக்கலும் உருவெடுக்கிறது. மலச்சிக்கல் இருந்தால் வியர்வையில் அதிக துர்நாற்றம் தொடரும். இதனால் மனரீதியாகவும் பெருமளவில் பதிப்புகள் ஏற்படுகின்றன.

மனதில் தேவையில்லாத கவலை, பயம், கோபம், பொறமை, வெறுப்பு தோன்ற ஆரம்பிக்கும். இவ்வாறான தீய எண்ணங்கள் அல்லது தீய நினைப்புகளுக்கு ஏற்றார்போல் உடல் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதுவும் வியர்வை துர்நாற்றத்திற்கு மிக முக்கிய காரணம்.

உடலுக்கு இரசாயன பூச்சுக்களை பயன்படுத்தாமல் இயற்கையான பயத்தம் மாவு, கடலை மாவு, மூலிகைகள் அல்லது பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி வியர்வை நாளங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதும், அதிக நீர் அருந்துவது, உணவில் காய்கறி, பழங்களை உபயோகிப்பது, தீட்டாத அரிசி தானியங்களை உபயோகிப்பதும், குளிக்கும் முன் எலுமிச்சை சாறு தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெறும் கைகளால் தேய்த்து குளித்து வருவது சிறந்தது.

மலச்சிக்கல் இல்லாமல், எளிமையாக செரிமானமாகும் உணவுகளையும், பழங்கள், காய்கறிகள், கீரைகள், நார்சத்துக்கள் நிறைந்த அரசிகள் தானியங்களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதால் வியர்வை துர்நாற்றத்திலிருந்து நம்மை நாம் பாதுகாக்கலாம்.

வியர்வை துர்நாற்றத்தைப் போக்க வழிகள்

  • பொறுமையாக ரசித்து ருசித்து அதிக மசாலா இல்லாத ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல். 

  • மாமிசம், அதிக காரம், டீ, காபியை தவிர்ப்பது.

  • அதிக எடையை குறைப்பது அவசியம். உழைப்பில்லாது அதிக தூக்கம் கழிவுகளை உடலில் தேங்க செய்யும். 

  • இறுக்கம் இல்லாது இயற்கைப் பருத்தி துணியால்லான ஆடைகளை உபயோகிப்பது.
  • உடலுக்கு இரசாயன பூச்சுக்களை பயன்படுத்தாமல் இயற்கையான பயத்தம் மாவு, கடலை மாவு, மூலிகைகள் அல்லது பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி வியர்வை நாளங்களை தூய்மையாக வைத்துக்கொள்வது. அதிக நீர் அருந்துவது, உணவில் காய்கறி, பழங்களை உபயோகிப்பது, தீட்டாத அரிசி தானியங்களை உபயோகிப்பது.

sweating in tamil, sweating is good for health, sweating in body, Reasons for excexx sweating, sweating in underarms
  • யோகா, தியானம் மூலம் மனதையும், உடலையும் அமைதியாக வைப்பது. 

  • உடல், குடல் தூய்மை மிக முக்கியம்.

  • மூலிகைக் குளியல் சிறந்தது. முதல் நாள் ஒரு தண்ணீர் குடத்தில் சிறிது வேப்ப இலை, தும்பை செடி இலை, நன்னாரி வேர், வெட்டி வேர் போட்டு ஊறவைத்து மறுநாள் காலை இந்த மூலிகைத் தண்ணீரில் குளித்து வந்தால் உடலின் நீர் கழிவுகள் வெளியேறி வியர்வை துர்நாற்றம் குறையும். 

  • சூரிய ஒளி குளியல் மற்றும் மண் குளியல் சிறந்து செயல்படும்.  கடல், அருவி குளியல் செய்யலாம். இது உடல் சூட்டை தனிக்கும், உடலை குளிர்ச்சியாக வைக்கும். 

  • குளிக்கும் முன் எலுமிச்சை சாறு தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெறும் கைகளால் தேய்த்து குளித்து வருவது சிறந்தது.

  • சுகந்த முத்திரை என்னும் முத்திரையை தொடர்ந்து செய்வதினால் வியர்வை துர்நாற்றம் அகலும். சுகந்த முத்திரை – கடைசி இரண்டு விரல்களையும் மடக்கி உள்ளங்கையில் ஊன்றவும்.பெருவிரலின் நுனியை, மோதிர விரலின் பக்கவாட்டுப் பகுதியில் வைக்கவும். மற்ற இரண்டு விரல்களையும் இணைத்து பெருவிரலின் மேல் பதியவைத்து நுனிகளை நேராக நீட்டவும். காலை, மாலை 2-3 நிமிடம் செய்யலாம். 

  • விடியற்காலை எழுந்து குளித்த பின் சூரியனை வழிபடுவது அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் இருப்பது (காலை சூரிய கதிர்கள்) உடலின் நச்சுக்களையும், கழிவுகளையும், துர்நாற்றத்தையும்  போக்கும்.  மன உடல் வலிமையை த் தரும். 

அதிகாலை சூரிய நமஸ்காரம், சிறிது காலை வெயில் படும்படி யோகா உடற்பயிற்சி செய்வதாலும் விரைவில் இந்த தொந்தரவிலிருந்து நம்மை எளிமையாக நாம் பாதுகாக்கலாம்.

இவ்வாறான சீராண பழக்கங்களைக் கொண்டு வியர்வையால் ஏற்படும் பதிப்புகளை நாமே இயற்கை முறையில் சரி செய்து கொண்டு ஆரோக்கியமான வாழ்வு பெறலாம். வியர்வைக்காக இரசாயனங்களையும்தவிர்க்க உடலும், சருமமும் பளபளக்கும்.