பொதுவிடங்களில் செல்லும் பலருக்கு வரக்கூடிய ஒரு மிக சங்கடமான விஷயம் என்னவென்றால் வாய் நாற்றம்.
வாய் துர்நாற்றம் என்பது வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளாலும் தோல் சார்ந்த நோய்களாலும் வரக்கூடியது. அது மட்டுமல்லாமல் நீண்ட நாள் மலச்சிக்கல் இருக்க வாய் நாற்றம் ஏற்படும். இதற்கு முதலில் நாம் உணவையும், நமது உடலையும் கவனிக்கவேண்டும்.
முதலில் எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவுகளை தொடர்ந்து இந்த வாய் நாற்றம் தீரும் வரை எடுத்துக் கொள்வது அவசியம். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
அதுமட்டுமில்லாமல் வியர்வை மூலமாக நமது உடலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் வெளியேற வகை செய்ய வேண்டும். அதற்கு காலையில் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருப்பது அவசியமானது.
இனிவாய்நாற்றத்தை போக்குவதற்கான சில எளிய வழிகளையும் பார்ப்போம்.
வாய் துர்நாற்றம் தீர நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து இளம் சூடான நீரில் வாய் கொப்பளித்து வரலாம்.
வாய் நாற்றத்தைப் போக்க தினமும் கோதுமைப்புல் மென்று துப்பி விட நாற்றம் நீங்கும். அதிகமான சத்துக்கள் அளிக்கக்கூடிய ஒரு பயிர் இந்த கோதுமைப் புல். முளைத்த ஒரு ஏழு நாட்களுக்குள் கிடைக்கக்கூடிய கோதுமை புல்லை மென்பதால் நல்ல பல கிடைக்கும். உடல் கழிவுகள் நீங்கும்.
கொட்டைபாக்கு கிராம்பு சேர்த்து பொடித்த பொடியை சாப்பாட்டிற்கு பின் வாயில் அடக்கிவைத்து துப்ப வாய் நாற்றம் நீங்கும்.