நீண்ட நேரம் உட்கார்ந்த படியே வேலை செய்பவர்களுக்கும் அதிக தூரம் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனை முதுகுவலி. பெரும்பாலும் நாற்காலியில் நேராக உட்காராமல் கூன் விழுமாறு சாய்ந்து நெஞ்சை நிமிர்த்தி உட்கார்ந்து பணி செய்பவர்களை அதிகம் இந்த தொந்தரவு பாதிக்கிறது.
முதுகுவலி சாதாரணமாக பலரிடமும் இருக்கும் ஒரு தொந்தரவு தான் என்றாலும் இதனை ஆரம்பகாலத்திலேயே கவனிக்காமல் விட்டால் இந்த பாதிப்பு கால்களையும் தாக்கி மூட்டுவலி, கால்வலி, உடல்வலி என நீங்காமல் தொடர்ந்துக் கொண்டே இருக்கும். இந்த தொந்தரவிலிருந்து நாம் நம்மை முழுமையாக விடுவித்துக் கொள்ள தொடந்து வாழ்வியல் மாற்றம், உணவு மாற்றம் மற்றும் ஆசனங்கள் செய்வது அவசியம். இதை விடுத்து பலர் மருந்து மாத்திரைகள் உண்பது, ஆங்கல மருத்துவம் அல்லது ஏதேனும் ஒரு மருத்துவ சிகிச்சை முறையை மேற்கொள்வது நிரந்தர தீர்வை அளிக்காது என்பதை மறந்து விடக் கூடாது.
முதுகில் ஏற்படும் வலிக்கு சிறந்த தொடர் நிவாரணத்தைப் பெறவிரும்புபவர்கள் யோகாசனம் செய்வதை நடைமுறைப் படுத்த வேண்டும். குறைந்தது காலை நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்வதை பழக்கப் படுத்தவேண்டும். இதுவே முதுகுவலிக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும்.
- சத்தான ஆகாரங்கள் அதிலும் குறிப்பாக நல்ல புரதம் உள்ள உணவுகளை உண்பது உடலில் ஏற்படும் வலிகளைப் போக்க உதவும். தரம் குறைந்த புரத உணவுகளை உட்கொள்வதால் நச்சு அமிலங்கள் உண்டாவதும் அதனால் இரத்த ஓட்டம் சீர்கெடுவதும் அதிகமாகும். அதனால் கடலைப் பருப்பு போன்றவற்றை தவிர்ப்பது அவசியம்.
- அதிகாலை சூரிய ஒளியில் சிறிதுநேரம் இருப்பதும், நல்லெண்ணெய் மசாஜ் செய்வதும் சிறந்த பலனை அளிக்கும்.
- நொச்சி இலை சாறு எடுத்து அதனில் மிளகு நெய் சேர்த்து சாப்பிட முதுகுவலி மறையும். நொச்சி இலை குளியல் நல்ல பலனை அளிக்கும். நொச்சி இலையை சுடு நீரில் ஊறவைத்து அந்த சுடுநீரில் குளியல் செய்ய வலிகள் பறந்தோடும்.
- முருங்கை ஈர்க்கு குடிநீர் அல்லது சூப், ரசம் செய்து பருக நல்ல பலன் கிடைக்கும்.
- அவ்வப்பொழுது முதுகுத் தண்டு குளியல் செய்துவர விரைவாக இந்த பிரச்சனை மறையும்.
- தலைக்கு தலையணை இல்லாமல் நேராக கால்களை நீட்டி படுக்க வேண்டும், கட்டிலில் படுப்பதானால் நேராக இருக்குமாறு படுக்க வேண்டும். நடுவில் தொய்வு இல்லாமல் இருக்க வேண்டும்.
- நாற்காலியில் அமரும்பொழுது நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.
- மாப்பிள்ளை சம்பா அரிசி அல்லது பூங்கார் அரிசி வடிகஞ்சியை சிறிது சீரகப் பொடியுடன் வெண்ணை அல்லது நெய் கலந்து பருக விரைவில் முதுகு வலி மறையும்.
- ஆரோக்கியமான உணவுகளை அதிலும் இயற்கை உணவுகளை அதிகம் உட்கொள்ள இரத்த ஓட்டம் சீராகும், முதுகு வலி விரைவில் மறையும்.