உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பல நோய்களுக்கு சிறந்த தீர்வை இந்த ஆவாரம் பூக்கள் அளிக்கிறது.
மேகவேட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்பு பூத்தல், வறட்சி, ஆயாசம், மலச்சிக்கல், மூலம், கண் எரிச்சல் என பலவற்றை நீக்கும். உடலுக்கு பலத்தை தரும். மூலத்திற்கு எவ்வாறு ஆவாரம் பூவை பயன்படுத்துவது என தெரிந்து கொள்ள ஆவாரம்பூ பக்கத்திற்கு இணையவும்.
- ஆவாரம் பூ குடிநீரை தவறாமல் குடித்து வந்தால், உடல் குளுமை அடையும். உஷ்ணம் நீங்கும்.
- ஆவாரம் பூவை ஊற வைத்து, குடிநீர் தயாரித்து அருந்தினால் நாவறட்சி நீங்கும். கண் எரிச்சல் நீங்கும்.
- உடல் சூட்டினால் கண் சிவந்து விடும். அவர்கள் ஆவாரம் பூவை உலர்த்திப் பொடித்து, நீர் விட்டு அரைத்து குழப்பி, படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட்டால் சிவப்பு நிறம் மாறும்.
- காலை, மாலை, அரை தேக்கரண்டி பசு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமடையும்.
- பூச்சூரணத்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறி கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்பு பூத்தல் வறட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.
- ஆவாரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பிராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரை தைலம்) காய்ச்சி, தலை முழுகி மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்சி, எரிச்சல் குணமாகும்.
- 20 கிராம் ஆவாரம் பட்டையை பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.