அவரைக்காய் மருத்துவம்

வைத்திய நூல்கள் அவரையின் மருத்துவத்தை இவ்வாறு கூறுகிறது. “கங்குல் உணவிற்கும் கறிக்கும் முறைகளுக்கும்.
பொங்குதிரி தோடதோர் புண்சுரத்தோர் – தங்களுக்கும்
கண்முதிரைப் பில்லநோய்க்காரருக்குங் காமுறையா
வெண்முதிரைப் பிஞ்சரம் விதி

அவரைக்காயில் பல ரகங்கள் உள்ளது. பட்டை அவரை தொடங்கி கோழி அவரை, சீனி அவரை, தம்பட்ட அவரை, குத்து அவரை, சிறகு அவரை, சிகப்பு கோழி அவரை, யானை காது அவரை என பலபல நாட்டு ரகங்கள் உள்ளது. இன்று இவை மட்டுமல்லாமல் பல நவீன ஒட்டு ரக அவரை வகைகளும் சந்தைகளில் அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால் நமது நாட்டு ரக அவரையே உடலுக்கு சிறந்த உணவாகவும், பல நோய்களுக்கு நல்ல மருந்தாகவும் உள்ளது.

அவரை கொடி வகை காய் வகையை சேர்ந்தது. இதனை வீட்டுத் தோட்டத்தில் மிக எளிமையாக வளர்க்க முடியும். பொதுவாக நாட்டு அவரை கார்த்திகை மாதம் பூத்து பின் காய்க்க தொடங்கும். தைமாதம் நல்ல விளைச்சளையையும் தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் பொதுவாக பல நாட்டு அவரைகளை சந்தையிலும் பெறமுடியும். கொடிக்காய்களில் சிறந்தது அவரைக்காய். மலிவான விலையில் நிறைய ஊட்டச்சத்தினைத்யும் தருவது அவரையே.

புரதம், சுண்ணாம்புச்சத்து, இரும்பு, வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் இதில் ஒருங்கே உள்ளன. மிக எளிதில் செரிமானமாகக் கூடியது அவரை. எனவே பலவீனமான குடல் உடையவர்களும், குறைந்த செரிமான தன்மை கொண்டவர்களும் விரும்பிய அளவு உண்ணத் தகுந்த காய். இரவு நேரத்திலும், பத்திய உணவாகவும் இது உண்பதற்கு ஏற்றது. முற்றிய அவரைக் காயை விட அவரைப் பிஞ்சே நல்லது.

வாயு, பித்தம்

வெண்ணிற அவரைக்காய் வாயு, பித்தம் போன்ற தொந்தரவுகளைக் கண்டிக்கும். உள்ளுறுப்புகளின் அழற்சியைப் போக்கும் தன்மையும் நிறைந்தது. வயிற்றில் வரும் தொந்தரவுகள் மற்றும் எரிச்சலை அடக்கும் தன்மையும் கொண்டது.

சீரணக் கோளாறு, நீரிழிவு நோய்

சீரணக் கோளாறு, நீரிழிவு நோய், பேதித்தொல்லை, அடிக்கடி தலை நோய் வருதல், சீதபேதி ஆகியவற்றிற்கு அவரையை அடிக்கடி உணவில் சேர்க்க நல்ல பலனைப் பெறலாம்.

காது வலி / தொண்டை வலி

இந்தியாவில் பல மாநிலங்களில் காது வலிக்கும், தொண்டை வலிக்கும் அவரைக்காயின் சாறைப் பயன்படுத்தும் பழக்கமுண்டு.

இரத்தக் கொதிப்பு

சமீபத்திய ஆய்வுகள் இரத்தக் கொதிப்பைத் தடுக்கும் ஆற்றல் அவரைக்கு உண்டு என தெரிவித்துள்ளனர்.

(1 vote)