Glycyrrhiza glabra L; Liquorice; அதிமதுரம்
ஆசியா, அப்ரிக்கா, ஐரோப்பாவில் விளையும் ஒரு நறுமண மற்றும் இனிப்பு சுவை வேர் மூலிகை அதிமதுரம். இன்று இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் மருத்துவம், அழகு, உடல் ஆரோக்கியம் என பலவற்றிற்காக பயன்படுத்தப்படும் மூலிகையாகவும் மிகப் பிரபலமாக இருக்கும் மூலிகை இந்த அதிமதுரம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு மிக சிறந்த உதாரண மூலிகையும் இது. அளவோடு பயன்படுத்த சிறந்த பலனை அளிக்கும், அதுவே அளவிற்கு மிஞ்சினால் அதுவே நஞ்சாகவும் மாறுகிறது.
உடலில் ஏற்படும் புண், சளி, பித்தம், வெப்பம், எரிச்சல், நரம்பு தளர்ச்சி, மூலம், இரத்தப்போக்கு, இரத்த வாந்தி போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த பலனை அளிக்கும். அதிமதுரம் ஒரு சிறு செடி வகையைச் சேர்ந்த தாவரம். இதன் இலைகள் மாற்றடுக்கில் இருக்கும், பூக்கள் நீலநிறத்திலும் இருக்கும். இதன் தண்டு வேர் பகுதியே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
ஒன்று இரண்டு சிட்டிகை அளவு அதிமதுரப் பொடியை தேனில் குழைத்து நாக்கில் நக்கி உண்டு வர சளி, இரைப்பு, தொண்டையில் உள்ள வறட்சி மறையும்.
மூலத்திற்கு ஒரு சிட்டிகை அளவு மோரில் கலந்து அளவோடு சில நாட்கள் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.
முக அழகு, உடல் அழகிற்கும் இதனை ஒரு பூச்சாக பயன்படுத்த நல்ல பலனை அளிக்கும்.