தமிழகத்தில் வாழ்ந்த பதஞ்சலி முனிவரால் உலகுக்கு தந்த ஞானமே அஷ்டாங்க யோகம் என படக்கூடியது. அஷ்டம் என்பதற்கு எட்டு என்று அர்த்தம். அஷ்டாங்க யோகம் என்பது எட்டு வகையான யோகங்கள் அதாவது எட்டு ராஜயோகங்களை குறிப்பதாகும். இதை பதஞ்சலி முனிவரின் ‘யோக சூத்திரம்‘ என்றும் கூறுவதுண்டு.
எட்டு வகையான அஷ்டாங்க யோகம் என்பது
- இயமம் (வாழ்வியல் / தார்மீக நெறிமுறைகள்)
- நியமம் (சுய தூய்மை)
- ஆசனம் (தோரணை)
- பிராணாயாமம் (சுவாச கட்டுப்பாடு)
- பிரத்தியாகாரம் (உணர்வு கட்டுப்பாடு)
- தாரணை (செறிவு)
- தியானம் (தியானம்)
- சமாதி (பிரபஞ்சத்தில் ஐக்கியமாதல்)
ஆகிய எட்டு நிலைகளைக் குறிக்கக் கூடியதே அஷ்டாங்க யோகம். இவற்றில் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் ஆகியவை புறத் தூய்மையை குறிக்கக் கூடியது. பிரத்தியாகாரம், தாரணை, தியானம் ஆகியவை அகத்தூய்மையும், சமாதி என்பது யோக நிலையையும் குறைக்கக் கூடியதாக உள்ளது.
இயமம், நியமம் நமது மனதை ஒருநிலைப்படுத்த உதவக்கூடியது. ஆசனம் என்பது நமது உடலை உறுதியாக்கவும், ஆரோக்கியமுடன் இருக்கவும் செய்யக்கூடியது. நமது மனதும் உடலும் ஆரோக்கியமாக இருக்க நமது சிந்தனையும் செயல்களும் ஒருமித்து சீரானதாக இருக்கும். அடுத்ததாக பிராணாயாமம் என்று சொல்லக்கூடியது நமது சுவாசத்தை கட்டுப்படுத்தக் கூடியது.
சூரிய நமஸ்காரம் மற்றும் ஆசான்களை சுவாசத்தை கட்டுப்படுத்தி செய்வதால் உடல் உஷ்ணம், சிந்தனை, மனம் ஆகியவை ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து செயல்படக் கூடியதாக இருக்கும். இவை ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளையும், நோய்களையும் வெளியேற்ற உதவக் கூடிய ஆற்றலை நமக்கு அருளும். இவற்றால் நமது உடலும் மனதும் வலிமையோடு அதேசமயம் லேசாகவும் உணரப்படும்.
அடுத்து வரக்கூடிய பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை நமது மனதோடும் உடலோடும் சேர்ந்து மனதையும் கட்டுப்படுத்தி ஒருநிலைப்படுத்தி பிரபஞ்ச சக்தியோடு அதாவது இயற்கையோடு ஒன்று கலக்க உதவக்கூடிய நிலையை எந்தவிதமான சஞ்சலமும் இன்றி அளிக்கும்.