பூசணி பேரிச்சை சலட்

கர்ப்பிணிகளின் உணவு

நான்கு முதல் ஆறு மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கால் வீக்கம், கை கால் வலி போன்றவற்றிற்கும், இரத்த விருத்திக்கும் நெல்லிக்காய், எலுமிச்சை கொண்ட உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவு பல சத்துக்களை அளிக்க வல்லது.

தேவையான பொருட்கள்

1 துண்டு வெள்ளை பூசணி

1 துண்டு வெள்ளரிக்காய்

1 துண்டு கேரட்

1 துண்டு குடைமிளகாய்

1 துண்டு முள்ளங்கி

1 துண்டு தக்காளி

2 பேரிச்சை

2 மாதுளை

1 ஸ்பூன் ஊறவைத்த நிலக்கடலை

3 துருவிய பாதாம் பருப்பு

3 வால் நட்

10 கிஸ்மிஸ்

1 பச்சை மிளகாய் (அல்லது மிளகுத் தூள் சிறிது)

1 துருவிய பெரிய நெல்லிக்காய்

தேவையான அளவு  உப்பு

செய்முறை

காய்களை சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அதனுடன் மற்ற அனைத்தையும் ஒன்று சேர்த்து கலந்து கொள்ளவும்.

காலை அல்லது மதிய உணவிற்கு ஒரு மணி நேரம் முன் உண்ணலாம்.

கர்ப்பிணிகளுக்கு இருக்கும் காலை மயக்கம், குமட்டல் போன்றவற்றிற்குச் சிறந்தது. 

எளிதில் ஜீரணமாகும்.

நார்ச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் C, வைட்டமின் B-12 சத்து, புரதம், நீர் சத்து, சுண்ணாம்பு சத்து நிறைந்தது.

சின்ன வெங்காயம், தேங்காய், எலுமிச்சை என கூடுதல் சுவைக்கு கலந்துகொள்ளலாம்.

பூசணி பேரிச்சை சலட்

நான்கு முதல் ஆறு மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கால் வீக்கம், கை கால் வலி போன்றவற்றிற்கும், இரத்த விருத்திக்கும் நெல்லிக்காய், எலுமிச்சை கொண்ட உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இந்த உணவு பல சத்துக்களை அளிக்க வல்லது.
ஆயத்த நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 30 minutes

தேவையான பொருட்கள்

  • 1 துண்டு வெள்ளை பூசணி
  • 1 துண்டு வெள்ளரிக்காய்
  • 1 துண்டு காரட்
  • 1 துண்டு குடைமிளகாய்
  • 1 துண்டு முள்ளங்கி
  • 1 துண்டு தக்காளி
  • 2 பேரிச்சை
  • 2 மாதுளை
  • 1 ஸ்பூன் ஊறவைத்த நிலக்கடலை
  • 3 துருவிய பாதாம் பருப்பு
  • 3 வால் நட்
  • 10 கிஸ்மிஸ்
  • 1 பச்சை மிளகாய் ((அல்லது மிளகுத் தூள் சிறிது))
  • 1 துருவிய பெரிய நெல்லிக்காய்
  • தேவையான அளவு  உப்பு

செய்முறை

  • காய்களை சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • அதனுடன் மற்ற அனைத்தையும் ஒன்று சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • காலை அல்லது மதிய உணவிற்கு ஒரு மணி நேரம் முன் உண்ணலாம்.
  • கர்ப்பிணிகளுக்கு இருக்கும் காலை மயக்கம், குமட்டல் போன்றவற்றிற்கு சிறந்தது. 
  • எளிதில் ஜீரணமாகும்.
  • நார்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் C, வைட்டமின் B-12 சத்து, புரதம், நீர் சத்து, சுண்ணாம்பு சத்து நிறைந்தது.
  • சின்ன வெங்காயம், தேங்காய், எலுமிச்சை என கூடுதல் சுவைக்கு கலந்துகொள்ளலாம்.