அறுபதாம் குருவை இனிப்பு புட்டு

அறுபதாம் குருவை அரிசியில் எளிதாக உணவு தயாரித்து வாரம் ஒருமுறை அல்லது அன்றாடம் உண்ண உடல் வலுப்பெறும். எலும்புகள் உறுதியாகும்.

This image has an empty alt attribute; its file name is aruvathaam-kuruvai-arisi-ri.jpg

அறுபதாம் குருவை அரிசியைப் பற்றியும் அதன் சத்துக்கள் மருத்துவகுணங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள – அறுபதாம் குருவை அரிசி.

எளிமையாக தயாரிக்கக்கூடிய அறுபதாம் குருவை புட்டு எவ்வாறு தயாரிப்பது என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் அறுபதாம் குருவை அரிசி
  • ¾ கப் நாட்டு சர்க்கரை
  • சிறிது தேங்காய் துருவல்
  • 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
  • சிறிது முந்திரி

செய்முறை

  • அறுபதாம் குருவை அரிசியினை ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
  • அறுபதாம் குருவை அரிசியை முதலில் தண்ணீர் ஊற்றி  இரண்டு மூன்று முறை கழுவிய பின் தண்ணீரை வடித்துவிட்டு மெல்லிய துணியை விரித்துவைத்து அதன்மீது அறுபதாம் குருவை அரிசியை பரப்பி நிழலில் உலர்த்தவும். 
  • அறுபதாம் குருவை அரிசி முக்கால்பங்கு உலர்ந்த நிலையில் மிக்ஸியில் அல்லது மாவு அரைக்கும் மிஷினில் கொடுத்து சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

  • புட்டுமாவு தொட்டுப்பார்ப்பதற்கு மெல்லிய ரவை போன்று இருக்க, உதிரி உதிரியான சுவையான புட்டு தயாரிக்கலாம்.
  • சட்டியை அடுப்பில் வைத்து அறுபதாம் குருவை அரிசி ரவையைப் போட்டு இலேசான வாசம் வரும் வரை வறுக்கவும். 
  • பின் அறுபதாம் குருவை அரிசி ரவையில் சிறிது உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை சேர்த்து கிளறவும்.

  • தண்ணீர் மாவு முழுவதும் படும் படி கிளற வேண்டும்.
  • அதிகமாக தண்ணீர் சேர்த்தால் கூழாக மாறி விடும். எனவே தண்ணீரை கவனமாக சேர்க்கவும். மாவு கட்டிப் படாமல் நன்கு கிளறவும்.
  • பின்பு அறுபதாம் குருவை மாவை இட்லி பாத்திரத்தில் உள்ள தட்டுகளில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
  • வேறொரு கடாயில் சிறிதளவு பசு நெய் சேர்த்து முந்திரி பருப்பு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

  • அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை சேர்த்து இறக்கவும். 
  • வேகவைத்திருக்கும் அறுபதாம் குருவை அரிசி மாவை அதில் சேர்த்து அதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்கு கிளறவும்
  • சுவையான அறுபதாம் குருவை இனிப்பு புட்டு தயார். 
  • அனைத்து வயதினருக்கும் ஏற்ற விருப்பமான மாலை சிற்றுண்டியாகும்.

அறுபதாம் குருவை இனிப்பு புட்டு

அறுபதாம் குருவை அரிசியில் எளிதாக உணவு தயாரித்து வாரம் ஒருமுறை அல்லது அன்றாடம் உண்ண உடல் வலுப்பெறும். எலும்புகள் உறுதியாகும்.
ஆயத்த நேரம் : – 30 minutes
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 45 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • 1 கப் அறுபதாம் குருவை அரிசி
  • ¾ கப் நாட்டு சர்க்கரை
  • சிறிது தேங்காய் துருவல்
  • 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
  • சிறிது முந்திரி

செய்முறை

  • அறுபதாம் குருவை அரிசியினை ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
  • அறுபதாம் குருவை அரிசியை முதலில் தண்ணீர் ஊற்றி  இரண்டு மூன்று முறை கழுவிய பின் தண்ணீரை வடித்துவிட்டு மெல்லிய துணியை விரித்துவைத்து அதன்மீது அறுபதாம் குருவை அரிசியை பரப்பி நிழலில் உலர்த்தவும். 
  • அறுபதாம் குருவை அரிசி முக்கால்பங்கு உலர்ந்து தெரியும் நிலையில் மிக்ஸியில் அல்லது மாவு அரைக்கும் மிஷினில் கொடுத்து சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • புட்டுமாவு தொட்டுப்பார்ப்பதற்கு மெல்லிய ரவை போன்று இருக்க, உதிரி உதிரியான சுவையான புட்டு தயாரிக்கலாம்.
  • சட்டியை அடுப்பில் வைத்து அறுபதாம் குருவை அரிசி ரவையைப் போட்டு இலேசான பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். 