அறுவதா – நம் மூலிகை அறிவோம்

Ruta graveolens; Rutaceae; அறுவதா

சதாப்பு இலை என்று வழங்கப்படும் மூலிகை இந்த அறுவதா மூலிகை. பொதுவாக மலைப்பிரதேசங்களில் வளரும் தன்மைக் கொண்ட மூலிகை. குறுஞ்செடி இனத்தை சேர்ந்த இந்த அறுவதா நல்ல மனமுடைய செடியாகும். மஞ்சள் நிற அழகியப் பூக்கள் கொண்ட மூலிகை. பார்க்க மிக அழகாக இருக்கும்.

உடலுக்கு வெப்பத்தையும், மாதவிலக்கையும் ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது. மேலும் உடலில் ஏற்படும் வலி மற்றும் கோழையையும் அகற்றக் கூடியது. இலை மருத்துவப் பயன்கொண்டது.

அறுவதா இலையை உலர்த்தி அதனை நெருப்பில் இட்டு அந்த புகையை சுவாசிக்க இருமல் கட்டுப்படும். வெள்ளைப்படுதல், மூட்டுகள் எலும்புகளுக்கும் சிறந்த பலனை அளிக்கும்.

குழந்தைகளுக்கு

தாய்ப் பாலுடன் அறுவதா இலையைக் கசக்கி பத்து துளி எடுத்து சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க காய்ச்சல், சளி நீங்கும். மேலும் சில குழந்தைகளுக்கு இந்த இலைசாறுடன் மஞ்சள் சேர்த்து குழந்தைகளுக்கு உடலில் பூசி குளிக்க வைக்க சளி, நீர்க்கோவை, குளிர்ச்சி நோய்கள் நீங்கும்.

பெரியவர்களுக்கு

அறுவதா இலைப் பொடியை தேனில் குழைத்து சரியான அளவில் எடுத்துவர செரியாமை, நாள்பட்ட மார்பு சளி, வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு மறையும்.