அருகம்புல் ஜூஸ் / Arugampul Juice

இந்த அருகம்புல் ஜூஸ் பருகுவதால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகளையும் மற்ற கழிவுகளையும் அது வெளியேற்ற உதவும். உடலில் உள்ள கிருமிகளை அழிக்க கூடியது. உடல் உஷ்ணத்தை குறைக்க கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. உடலில் தேங்குகிற கழிவுகளையும் வெளியேற்றக் கூடியது.

உடல் பருமன், நீரிழிவு நோய்க்கு அற்புதமானது. மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை பருக பலவிதமான நன்மைகளை பெற முடியும்.

தேவையான பொருட்கள்

  • ஒரு கைப்பிடி அளவு அருகம் புல்
  • ஒரு பெரிய நாட்டு ரோஜா இதழ்கள்
  • 2 ஸ்பூன் காரட் துருவல்
  • ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள்
  • ஒரு சிட்டிகை மிளகுத்தூள்
  • ஒரு கப் தேங்காய் தண்ணீர்

செய்முறை

  • நாட்டு ரோஜா இதழ்களை உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அருகம்புல்லுடன் ரோஜா இதழ்கள், கேரட் துருவல், ஏலக்காய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவற்றை ஒரு துணியில் பிழிந்து சாறு எடுக்கவும்.

  • இதனுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். தேங்காய் தண்ணீர் இல்லையென்றால் சாதாரண குடிநீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • அவ்வளவு தான் சுவையான அருகம்புல் ஜூஸ் தயார். காலையில்இதனை பருகுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அருகம்புல் ஜூஸ் / Arugampul Juice

இந்த அருகம்புல் ஜூஸ் பருகுவதால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகளையும் மற்ற கழிவுகளையும் அது வெளியேற்ற உதவும். உடலில் உள்ள கிருமிகளை அழிக்க கூடியது. உடல் உஷ்ணத்தை குறைக்க கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. உடலில் தேங்குகிற கழிவுகளையும் வெளியேற்றக் கூடியது. உடல் பருமன், நீரிழிவு நோய்க்கு அற்புதமானது. மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்தது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை பருக பலவிதமான நன்மைகளை பெற முடியும்.
Drinks
Indian
Arugampul Juice
ஆயத்த நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 5 minutes

தேவையான பொருட்கள்

  • ஒரு கைப்பிடி அளவு அருகம் புல்
  • ஒரு பெரிய நாட்டு ரோஜா பூ இதழ்கள்
  • 2 ஸ்பூன் காரட் துருவல்
  • ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள்
  • ஒரு சிட்டிகை மிளகுத்தூள்
  • ஒரு கப் தேங்காய் தண்ணீர்

செய்முறை

  • அருகம்புல்லை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
  • அருகம்புல் கிடைக்கவில்லை என்றால் ஒரு ஸ்பூன் அளவு அருகம்புல் பொடி பயன்படுத்திக் கொள்ளலாம்.