Archae பாக்டீரியா கரைசல் (ஆர்கிய பாக்டீரியல் கரைசல்)

பொதுவாக செடிகளுக்கு உரங்களை நேரடியாக அப்படியே கொடுக்கும் பொழுது அவை சீரான முறையில் செடிகளுக்கு சென்றடைவதில்லை. இந்த உரங்களை நுண்ணுயிர்கள் உதவியுடன் மண்ணில் உருமாற்ற அவை சீரான முறையில் செடிகளுக்கு தேவையான சத்துக்களைப் பெற உதவுகிறது. மண்ணில் இருக்கும் சத்துக்களை செடிகள் உட்கிரகிக்க துணையாக இருக்கக் கூடிய கரைசல் தான் இந்த Archae பாக்டீரியா கரைசல்.

Archae பாக்டீரியா உலகின் முதல் பாக்டீரியா ஆகும்.
இக்கரைசல் மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.

ஆர்கிய பாக்டீரியல் கரைசல்

தயாரிக்க தேவையான பொருட்கள்

புதிய சாணம் – 20 கிலோ
நாட்டுச் சர்க்கரை – 3 கிலோ
கடுக்காய்த் தூள் – 100 கிராம்
அதிமதுரப் பொடி – 10 கிராம்

ஆர்கிய பாக்டீரியல் கரைசல் தயாரிக்கும் முறை

ஒரு 50 லிட்டர் பிளாஸ்டிக் கேனை எடுத்துக் கொள்ளவேண்டும். புதிதாக கிடைத்த பசுஞ்சாணம் 20 கிலோ நாட்டுச்சர்க்கரை 3 கிலோ, கடுக்காய் தூள் 100 கிராம், தண்ணீர் 2௦௦ லிட்டர் ஆகியவற்றை பிளாஸ்டிக் கேனில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். அதிமதுரம் பத்து கிராம் எடுத்து கால் லிட்டர் நீரில் கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரையும் கேனில் ஊற்றவேண்டும். பிறகு கேன் முழுக்க தண்ணீர் நிரப்பி நன்றாக மூடி வைத்துவிட வேண்டும்.

10 நாட்களுக்குப் பிறகு Archae பாக்டீரியா கரைசல் தயாராகிவிடும். இந்த கரைசல் பழுப்பு நிறமாக மாறி ஒரு வித மணம் வீசும். இந்த கரைசலைப் பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

இரண்டு நாள் கழித்துப் பார்த்தால், கேன் விரிந்து உப்பி இருந்தால் உள்ளேயிருக்கும் மீத்தேன் வாயு வெளியேறு மூடியை லேசாக திறந்து விடவேண்டும்.

ஆர்கிய பாக்டீரியல் கரைசல் பயன்படுத்தும் முறை

ஆர்கிய பாக்டீரியல் கரைசல் ஒரு லிட்டரை 1௦ லிட்டர் நீருடன் கலந்து பயிர்களுக்கு அளிக்கலாம். இதனை பஞ்சகவ்யா, மீன் அமிலம், அரப்பு மோர் போன்ற கரைசலுடனும் சேர்த்து செடிகள், பயிர்கள், மரங்களுக்கு அளிக்கலாம்.

ஆர்கிய பாக்டீரியல் கரைசல் பயன்கள்

இந்த ஆர்கிய பாக்டீரியல் கரைசல் நுண்ணுயிர்களை அதிகரிப்பதால் பயிர் வளர்ச்சி, காய் கனி வளர்ச்சி மன்றும் சுவை அதிகமாகும். பூச்சி மற்றும் நோய்களையும் கட்டுப்படுத்தும். செடிகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

மேலும் இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை இடுபொருட்களை தயாரிக்கும் முறையை அறிந்துக்கொள்ள – இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள்.