Nerium oleander; அரளி
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இருக்கக்கூடிய ஒரு தாவரச்செடி என்றால் அது அரளி செடி தான். வீடுகளிலும் சாலையோரங்களிலும் சாதாரணமாக பார்க்கக்கூடிய ஒரு தாவரம் இந்த அரளிச்செடி. அதிக முயற்சி எதுவுமே இல்லாமல் நன்கு வளரக்கூடியது. எளிமையாக இந்த தாவரம் பல்கிப் பெருக கூடிய இயல்புடையதாகவும் உள்ளது.
அரளிச் செடியின் இலையையோ, வேரையோ மருத்துவத்திற்காக யாரும் பயன்படுத்த மாட்டார்கள். பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை.
அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பிரயோகத்திற்காக மட்டுமே பயன்படுத்தலாம். இறை வழிபாட்டில் இறைவனுக்கு படைக்க அரளிப் பூக்களை மாலையாக தொடுத்து பயன்படுத்துவதுண்டு. அரளிப் பூக்கள் பல நிறங்களில் உள்ளது.
வெளிப் பிரயோகத்திற்காக மட்டுமே பயன்படும் அரளிப் பூவை அரைத்துக் சரியான அளவில் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.
அரளிப் பூவை தக்க முறைப்படி மருந்தாக்கிப் பயன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக் கூடும் இந்த தாவரப் பூ.