நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, மலச்சிக்கலை போக்கும் அற்புதமான கீரை ஆராக்கீரை என்ற நீராரை. மழை காலங்கள், வயல் வரப்புகளில் அதிகம் காணப்படும் இந்த ஆராக் கீரையைக் கொண்டு பொரியல், கூட்டு, ஜூஸ் என பல உணவுகளை செய்தும் உண்ணலாம் அல்லது அப்படியே பறித்து நான்கைந்து கீரைகளையும் வாயில் இட்டு காலை நேரத்தில் மென்றும் சாப்பிடலாம்.
இந்த பதிவில் நீராரை, ஆரைக் கீரை என்ற ஆராக் கீரை பொரியல் எவ்வாறு செய்வது என பார்க்கலாம். ஆராக்கீரை பயன்கள் மருத்துவகுணங்களை தெரிந்துக் கொள்ள இங்கு இணையவும்.
தேவையான பொருட்கள்
- ஒரு கையளவு நீராரை கீரை
- 2 ஸ்பூன் பாசிப்பருப்பு
- 1-2 பச்சை மிளகாய்
- 5-6 சின்ன வெங்காயம்
- ஒரு ஸ்பூன் எண்ணெய்
- சிறிது கடுகு
- சிறிது உளுந்து
- சிறிது பெருங்காயம்
செய்முறை
- ஆரைக்கீரையை நன்கு சுத்தம் செய்து இரண்டு மூன்று முறை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பாசிப்பருப்பை கழுவி சிறிது நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு, உளுந்து, பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- அதனுடன் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
- வெங்காயம் நன்கு வதங்கிய பின் அலசி எடுத்து வைத்திருக்கும் ஆராக் கீரை, ஊறிய பாசிப்பருப்பை சேர்த்து வதக்க வேண்டும்.
- சில நிமிடங்களில் ஆராக்கீரை நன்கு வெந்துவிடும்.
- சுவையான ஆராக்கீரை பொரியல் தயார்.
ஆரைக் கீரை பொரியல்
Desc
⏲️ ஆயத்த நேரம்
5 mins
⏲️ சமைக்கும் நேரம்
10 mins
🍴 பரிமாறும் அளவு
2
🍲 உணவு
பொரியல்