ஆரைக் கீரை / நீராரை / ஆராக் கீரை – நம் கீரை அறிவோம்

Marsilea quadrifolia; நீராரை; ஆரைக் கீரை; ஆராக் கீரை

மழை காலங்களில் அதிகம் கிடைக்கக் கூடிய கீரை இந்த ஆலக்கீரை/ ஆராக் கீரை / ஆரைக் கீரை / நீராரை. இது ஒரு நீர் தாவரம். ஆலக்கீரை, ஆரைக் கீரை, நீராரை என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த கீரை உடலுக்கு சிறந்த பலத்தை அளிக்கும், மூளையின் செயல் திறனை அதிகரிக்கும், நீரிழிவை கட்டுபடுத்தும், மலச்சிக்கலுக்கு சிறந்தது.

  • நீராரை கீரையை சமைத்து உண்பதுடன் பச்சையாக சாப்பிட பல உடல் உபாதைகள் மறையும். சாதாரணமாக குளம், குட்டைகள், வாய்கால், விவசாய நிலங்களில் பார்க்கப்படும் கீரை. உலகில் பல நாடுகளில் மூவாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் கீரை இது என்று கூட சொல்லலாம்.
  • வெப்பத்தை நீக்கி தாகத்தை தணிக்கும் தன்மை கொண்ட கீரை இந்த ஆரைக் கீரை. இனிப்பு சுவை கொண்ட இந்த கீரையில் பல சத்துக்களும் குறிப்பாக பீட்டா கரட்டீன் சத்துக்கள் அதிகம் கொண்டுள்ள கீரை.

  • ஆராக் கீரையை அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவுகள் இருப்பவர்கள் உண்ண விரைவில் இந்த தொந்தரவு நிற்கும். மேலும் சிறுநீரில் இரத்தம் சேர்ந்து தொந்தரவும் நிற்கும்.
https://www.youtube.com/watch?v=vB-J4IZ-5JM

  • நீரிழிவு, உடலில் ஏற்படும் வலி வீக்கங்களுக்கும் இந்த ஆலாக் கீரை சிறந்த பயனளிக்கும்.
  • சரும பளபளப்பையும், தோல் நோய்களுக்கும் சிறந்தது.

  • சிறந்த மலமிளக்கியாகவும் உள்ளது.
  • தாய்பால் நிறுத்தும் பெண்கள் இதனை சாப்பிட தாய்ப்பால் சுரப்பு நிற்கும்.
  • சிறுநீரகத்தில் ஏற்படும் பல நோய்களை போக்கக் கூடியதாகவும் உள்ளது.
  • குழந்தையின்மையை போக்கக் கூடியது.

  • உடல் பருமனுக்கு ஏற்ற கீரை. தேவையில்லாத சதையை அகற்றக் கூடியது.
  • உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை போக்கவல்லது இந்த நீராரை கீரை.

  • இன்று பல ஆண்கள் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் தொந்தரவுகளை விரைவில் சீராக்கும் தன்மை கொண்ட கீரை இந்த ஆரைக் கீரை.
  • புற்று நோயைக் கூட விரட்டக் கூடியது.

இந்த ஆலாக் கீரையில் கூட்டு, பொரியல், ஆலாக் கீரை ஜூஸ் என பலவகையில் உணவுகளை தயாரித்தும் உண்ணலாம்.

ஆரக் கீரை / நீராரை கீரை பொரியல்

https://www.youtube.com/watch?v=fzxEQ4fhSa0

ஆரக் கீரை / நீராரை கீரை கூட்டு

https://www.youtube.com/watch?v=Z1K0bXVy3Ss