அரைக்கீரை – நம் கீரை அறிவோம்

தமிழகத்தில் பெரும்பாலும் பல இடங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் கீரை இந்த அரைக் கீரை. மசியல் அல்லது பொரியல் செய்து உணவுடன் சேர்த்து இந்த அரைக் கீரையை உண்பார்கள். அதிக சத்துக்கள் கொண்ட கீரை.

வாயு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து புளி சேர்க்காமல் இந்த அரைக் கீரையை கடைந்து சாப்பிட்டால் இந்த தொல்லையிலிருந்து விரைவில் வெளிவரலாம்.

ஆண்மை குறையுடையவர்கள் இந்த கீரையை தினசரி உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் படிப்படியாக ஆண்மை சார்ந்த பிரச்சனைகள், ஆண்மை கோளாறு நீங்கும்.

ஜலதோஷத்தினால் உண்டாகும் சளி, இருமல், தொண்டை புண், பிடிப்பு ஆகியவற்றிற்கு இந்த கீரையை கடைந்து உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் விரைவில் குணமாகும்.

அரைக் கீரையை சாப்பிடுவதன் மூலம் இதயம், மூளை பலம் பெறும். மலட்டுத்தன்மை போக்கும் ஆற்றலும் இதற்கு அதிகம் உண்டு.

அரைக் கீரை மலச்சிக்கலைப் போக்கி குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடல் சூட்டை சமநிலைப்படுத்துகிறது.

நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் பலவீனத்தைப் போக்க இந்த கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் விரைவில் நலம் பெறுவார்கள்.