Anacyclus Pyrethrum in tamil, Herb Akarkara

அக்கரகாரம் – நம் மூலிகை அறிவோம்

Anacyclus Pyrethrum; Anacyclus Pyrethrum Root; Akarakaraba

சல்லி வேர் மூலிகை அக்கரகாரம் பல நோய்களுக்கு மிக சிறந்த மருந்து. சிறு செடி இனத்தை சேர்ந்த இந்த வெண்கருமை நிற வேர்களைக் கொண்டு நறுமண எண்ணெய் மற்றும் மருந்துகளும் தயாரிக்கப்படுகிறது. அக்கிராகாரம், அக்ராகாரம் என பல பெயர்கள் இதற்கு உண்டு.

Anacyclus Pyrethrum in tamil, Herb Akarkara

அழகிய வெள்ளை மலர்களையும், பச்சை மற்றும் சற்று மாறிய நிற இலைகளையும் கொண்ட மூலிகை. வலிப்பு, வாத நோய்க்கு மிக சிறந்த மருந்து இந்த மூலிகை. அதிக தாகத்தைப் போக்கும். உடலில் ஏற்படும் நோய்கள் பலவற்றை தீர்க்கும் இந்த மூலிகை வேர் உமிழ் நீரை பெருக்கி வெப்பத்தை உண்டாக்கும் தன்மைக் கொண்டது.

வலிப்பு நோய்க்கு

அக்கரகாரம் வேர் மூலிகைப் பொடியை மூக்கிலிட கை, கால் வலிப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சிக்கு

வயிற்று நோய்கள், நரம்பு தளர்ச்சிக்கு அக்கரகாரம் மூலிகையுடன் கிராம்பு, ஜாதிக்காய், குங்குமப்பூ, சுக்கு, திப்பிலி, செஞ்சந்தனம் இன்னும் சில மூலிகைகள் கலந்து பொடித்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை அளவு அன்றாடம் எடுத்துவர விரைவில் மறையும்.

வாயில் ஏற்படும் நோய்களுக்கு

வாய், தொண்டைப் பகுதியில் வரும் நோய்கள், தொற்றுகளுக்கு சிறந்தது அக்கரகாரம் வேர். மேலும் திக்குவாய் போன்ற தொந்தரவுகளுக்கும் சிறந்த பலனை அளிக்கும். இந்த சிறு வேரை வாயில் அடக்கிக் கொள்ள சுவையின்மை, நாக்கில் வரும் பாதிப்புகள், நாவறட்சி, உள்நாக்கு வளர்ச்சி, பல்வலி, தொண்டைக் கமறல் ஆகியவை மறையும். இந்த அக்கரகாரம் நீரை முதல் நாள் இரவு நீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரைக் கொண்டும் வாய் கொப்பளித்து வர இந்த தொந்தரவுகள் நீங்கும்.

(1 vote)