amman pacharisi, chitirappaladai, milk secretion, milk secretion foods in tamil, paati vaithiyam to increase breast milk in tamil, lactation foods in tamil, mother milk producing foods

அம்மன் பச்சரிசி

Euphorbia Pilurifera; அம்மன் பச்சரிசி; Euphorbia hirta; Euphorbia indica; Euphorbiaceae sp;

amman pacharisi,
amman pacharisi, chitirappaladai, milk secretion, milk secretion foods in tamil, paati vaithiyam to increase breast milk in tamil, lactation foods in tamil, mother milk producing foods

நகரங்கள் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் பார்க்கக் கூடிய அம்மன் பச்சரிசியின் வேறு பெயர்கள் சித்திரப் பாலாடை, எம்மான் பச்சரிசி, பாலாட்டங் கொளை என்பதாகும். இதனை அம்மான் பச்சரிசி என்று அழைப்பதுண்டு. ஆங்கிலத்தில் Austrailan Sthima Weed என்று அழைப்பதுண்டு.

சொரசொரப்பான இவை பச்சை, சிவப்பு என இரண்டு நிறங்களில் இலைகளைக் கொண்டு காணப்படும். இந்த தாவரத்தின் எந்த பகுதியை ஒடித்தாலும் பால் வரும். 50 செ.மீ . வரை உயரம் உயரம் வளரும் இதன் இலைகள் எதிரெதிராக அமைந்தவை.

அம்மன் பச்சரிசியின் தன்மை

பொதுவாக இந்த அம்மன் பச்சரிசியின் இலை, பூ ஆகியவை மருத்துவ பயன் கொண்டது. துவர்ப்பு, இனிப்பு சுவையை கொண்டது. குளிர்ச்சியை உண்டாக்கக் கூடியது. இந்த செடியிலிருந்து நறுமண எண்ணெயையும் தயாரிக்கலாம்.

உடல் வறட்சி, வெட்டை, வாய்ப்புண், வயிற்றுப்புண், மலச்சிக்கல் , தாய்ப்பாலின்மை, உடற்சோர்வு, உடற் சூடு, நகச்சுற்று, வயிற்றுப் புழு ஆகியவற்றிற்கு சிறந்தது. இந்த கீரையை சமைத்துண்ண சுவையாக இருக்கும். மேலும் இந்த அம்மன் பச்சரிசி கீரையைப் பற்றி தெரிந்துக் கொள்ள அம்மன் பச்சரிசி பகுதியில் இணையவும்.

(1 vote)