Welcome to HealthnOrganicsTamil !!!

அம்மான் பச்சரிசி – நம் மூலிகை அறிவோம்

தாய்ப்பால் குறைவா? காலடியில் கிடக்கும் பாலாடை..

நவநாகரிக உலகில் உடல் ஆரோக்கியத்திற்கு தான் அதிக பஞ்சம். நினைத்தமாத்திரத்தில் பல்லாயிரம் மையில் தொலைவும், நொடியில் தொடர்பாக  சாத்தியப்பட்டுள்ளது இன்று. ஆனால் காலுக்கடியில் இருக்கும் அற்புதம் கண்களுக்கு புலப்படவில்லை என்பது வேதனையான ஒன்றாக உள்ளது.

வீட்டு உபயோக பொருட்களின் பட்டியலில் பலநாட்டு சரக்குகளுக்கு இன்று நிலையான இடம் கிடைத்துவிட்டது.. அதிலும் நம் மண்ணின் உணவுகளின் பெயர்கள் கூட மறந்துவிட்டதால் புதுப்புது நோய்களின் பெயர்களை செவிகள் உற்றுக் கேட்கிறது. அவ்வாறு கேட்டதில் மிகவும் வேதனை அளிப்பது பெற்ற குழந்தைக்கு பால்பற்றவில்லை என்ற நவநாகரீக தாயின் வேதனையை..

நமது நாட்டில் இன்னமும் வளங்கள் குறையாமல் கொட்டிக்கிடக்கிறது.. அவற்றை பாதுகாக்கத்தான் நமக்கு தெரியவில்லை என்று சொன்னால் மறுக்க இயலாது. எதை பாதுகாப்பது? பாதுகாப்பதற்கு நமது வளங்களையும் அவற்றை பற்றியும் நமக்கு தெரிந்திருந்தால் தானே பாதுகாப்பது..

அதிலும் அதன் பயன்கள், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது நமக்கு தெரிந்திருந்தால் மட்டுமே பாதுகாப்போம். வாங்க அவற்றை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம் மேலும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் தெரிந்து கொள்வோம்.

இன்று பிரசவித்த பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை குழந்தைக்கு பால் போதவில்லை என்பது தான். எங்கெங்கோ, என்னென்னவோ மருத்துவம், உணவுகளை தேடி தேடி முயற்சிக்கும் நமக்கு நமது காலடியில் இருக்கும் ஒரு பாலாடை போதும்.

தாய்க்கு அருவிபோல் பால்சுரக்க.. சித்திரப் பாலாடை என்ற மூலிகையை போதும்.. அது என்ன சித்திரப் பாலாடை என்கிறீர்களா.. அது வேறொன்றுமில்லை அம்மான் பச்சரிசி கீரை தான். சித்திரப் பாலாடை என ஒரு பெயரையும் கொண்டிருக்கும் அம்மான் பச்சரிசி கீரை.

amman pacharisi, chitirappaladai, milk secretion, milk secretion foods in tamil, paati vaithiyam to increase breast milk in tamil, lactation foods in tamil, mother milk producing foods

முக அழகிற்கும், சருமத்தில் ஏற்படும் பரு, புண், மரு, கட்டிகள் போன்றவற்றிற்கு பலரால் குறிப்பாக இளவயதினரால் அதிகம் பயன்படுத்தப்படும் கீரை தான் இந்த அம்மான் பச்சரிசி கீரை.

துவர்ப்பு கலந்த இனிப்பு சுவை கொண்ட இந்த கீரையின் முழுத்தாவரமும் மருந்தாக பயன்படக்கூடியது. குளிர்ச்சித் தன்மை கொண்ட இந்த கீரையை எங்கு கிள்ளினாலும் பால் வடியும். சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளரக்கூடியது இந்த சிறு செடி. சொரசொரப்பான எதிர் அடுக்கு கொண்ட இலைகளைக்கொண்ட கீரையிது.

சிறு பூண்டு இனத்தைச் சேர்ந்த இது வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும் மூலிகை. சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகளும் உண்டு. இதன் விதைகள் தோற்றத்திலும், சுவையிலும் அரிசிகுருணை போலிருப்பதால் பச்சரிசி கீரை என்றும் அம்மான் பச்சரிசி என்றும் அழைக்கப்படுகிறது.

இதன் இலைகள், பூக்கள், வேர், விதை என அனைத்து பாகமும் மருத்துவகுணம் கொண்டது. இது ஒரு கீரை வகையை சேர்ந்தது. இன்று பெருமளவில் இதனை கீரையாக பயன்படுத்தும் பழக்கம் குறைந்துவிட்டது. எந்த ரசாயனமும் இன்றி தானாக வளரும் இந்த கீரையை பயன்படுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்.

பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கப்படும் ஒரே கீரை இதுதான். காரணம் தாய்ப்பால் சுரப்பு மேலும் எந்த தொற்று கிருமிகளையும் அண்ட விடாது என்பதற்காக.

உடலில் ஏற்படும் மருக்களுக்கு இதன் பாலை தொடர்ந்து பூச மருக்கள் உதிர்ந்துவிடும். மேலும் முகத்தில் தோன்றும் அனைத்து சரும தொந்தரவுகளுக்கு இந்தபால் உதவும். கரும்திட்டுகள், கட்டிகளுக்கும் இதனை பூசலாம்.

இதன் இலைகளை நீரில் கலந்து சிறுதீயில் கொதிக்கவைத்து அதனை அருந்த, கொடிய தொற்றுநோய்களும் விலகும். இதன் பூக்களை மைய அரைத்து அல்லது பூக்களை நேரடியாக பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சி பருக்க தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

இதனை காலை மாலை என இரண்டு வேளை அருந்த வேண்டும். மேலும் பனங்கற்கண்டு சேர்த்து அருந்துவதால் உடலுக்கு நல்ல பலமும் தெம்பும் கிடைக்கும். குழந்தைகளுக்கும் கொடுக்க உடலின் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.

இந்த அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு மைய அரைத்து மோருடன் கலந்து கொடுக்க பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகள், வெள்ளைப்படுதல் நீங்கும்.

விந்து ஒழுகுதலுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர அம்மான்பச்சரிசி, கீழாநெல்லி இரண்டையும் சமஅளவு எடுத்து மைய அரைத்து எருமை தயிரில் கலந்து காலை ஒருவேளை இரண்டு வாரங்களுக்கு உட்கொள்ள நீங்கும்.

ஆண், பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் எண்ணைப்பிசுக்கையும் நீக்கும் இதன் பால் காலில் ஏற்படும் கால் ஆணி, பாத பித்த வெடிப்பு நீங்கும். உதட்டில் ஏற்படும் வெடிப்புகள், நிறமாற்றத்திற்கும் இதனை பயன்படுத்த சிறந்த நிவாரணம் கிடைக்கும். வாய்ப்புண்கள் மறையும்.

இதனில் கூட்டு, துவையல், பொரியல் செய்து உண்பதால் உடலில் ஏற்படும் புண்கள், மலச்சிக்கல், நரம்பு வீக்கம், நாவறட்சி, உடல் வறட்சி நீங்கும்..

மேலும் இதன் சிகப்பு நிற கீரையை பசும்பாலுடன் சேர்த்து உட்கொள்ள விந்தணுக்கள் அதிகரிக்கும். அம்மான் பச்சரிசி பால் செய்முறையை இந்த காணொளியில் பார்க்கலாம் – அம்மான் பச்சரிசி பால்

உடலில் ஏற்படும் வீக்கங்களையும், வலிகளையும் இந்த கீரை குறைக்க உதவுகிறது.

காசநோயினை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. குடல் சார்ந்த தொந்தரவுகள், ஆஸ்துமாவிற்கு சிறந்த மருந்து. சிறுநீர் கடுப்பு, எரிச்சலை போக்கும் தன்மை கொண்டது.

amman pacharisi, chitirappaladai, milk secretion, milk secretion foods in tamil, paati vaithiyam to increase breast milk in tamil, lactation foods in tamil, mother milk producing foods

அம்மான் பச்சரிசி துவையல் மலச்சிக்கலை போக்கும்.  ஒரு கையளவு அம்மான் பச்சரிசி இலைகள், கருப்பு உளுந்து, பூண்டு, சின்ன வெங்காயம் சிறிது மிளகு, புளிப்பிற்கு ஒரு தக்காளி ஆகியவற்றை நெய்யில் வதக்கி அரைக்க சுவையான அம்மான் பச்சரிசி துவையல் தயார்.

இதனை பாசிப்பருப்பு, சின்னவெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து கூட்டாகவும் செய்ய சுவையாக இருக்கும்.

இதனுடன் தூதுவளை இலைகளையும் சேர்த்து துவையல் செய்து உண்ண உடல் பலம் பெரும்.

பிறந்த குழந்தையை தாய்ப்பால் கொடுத்து தேற்றும் இந்த அம்மான் பச்சரிசி அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதமாக உள்ளது. இனி பயன்படுத்துவோம், பாதுகாப்போம் நமது காலடியில் இருக்கும் பொக்கிஷங்களை. 

மேலும் அம்மான் பச்சரிசி பயன்கள், நன்மைகள் தெரிந்துகொள்ள இந்த காணொளியில் பார்க்கவும்.

மதிப்பீடு செய்யவும்
சிந்தனை துளிகள் :

நிலத்தில் எடுத்த பூண்டு, நிலத்தில் மடிய வேண்டும்!

You may also like...

1 Response

  1. Selvakumar says:

    I need like herbals

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!