alkaline foods in tamil

காரத் தன்மை கொண்ட சில உணவுகள் (Alkaline Foods)

மானித உடலில் இருக்கும் கார அமிலத் தன்மை சரியான முறையில் இருக்க ஆரோக்கியமாக இருக்கலாம். காரத் தன்மை உள்ள உணவுகள் அதிகமாகவும், அமிலத் தன்மையுள்ள உணவுகள் குறைவாகவும் இருக்க வேண்டும். இவை மாறினால் நோய்கள் அதிகரிக்கச் செய்யும்.

அதிகமாக அசைவ உணவுகள், நொறுக்கு தீனி, அதிகமாக சர்க்கரை சேர்த்த உணவுகள், இரசாயனங்கள் உப்புக்கள் சேர்த்த உணவுகள், சத்துக்கள் நீக்கிய சமைத்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், குளிர்பானங்கள் போன்றவை அமிலத்தன்மையை அதிகரிக்கும் உணவுகளாகும். இந்த உணவுகளால் குடலில் செரியாமை ஏற்படும், குடலில் புளிப்புத் தன்மை அதிகரித்து அமிலத் தன்மை அதிகமாகும். நீரூற்றிவைத்த சோறு நாளாகநாளாக புளித்து காடியாவது போல் குடலும் புளிப்பு தன்மையாக மாறும்.

அதனால் அமிலத் தன்மைக் கொண்ட உணவுகளை அன்றாக உணவுகளில் இருந்து குறைத்துக் கொண்டு, காரத் தன்மைக் கொண்ட உணவுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்வது அவசியம். முளைக் கட்டிய தானியங்கள், காய்கறிகள், பழங்களை அதிகளவில் உட்கொள்ள காரத் தன்மை அதிகரிக்கும், அமிலத் தன்மைக் குறையும். மேலும் சுத்தமான மண் பானை குடிநீர் அதிக காரத் தன்மைக் கொண்டது.

alkaline foods in tamil

இவ்வாறான காரத் தன்மைக் கொண்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள பொதுவாக எந்த நோய் நொடியும் ஏற்படாது, உடலின் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கும், ஏதேனும் நோய் வந்தாலும் உடல் அதனைத் தன்னைத் தானே சரிசெய்துக் கொள்ளும் ஆற்றலும் கொண்டதாக இருக்கும். ஓவ்வொரு நாளும் நமது உணவில் முக்கால் சதவீதம் (75%) காரத் தன்மைக் கொண்ட உணவுகள் இருக்க வேண்டும். மிகக் குறைந்த அளவே அமில உணவுகளை உட்கொள்ள சிறந்தது. இவ்வாறான ஒரு பழக்கத்தை மேற்கொண்டால் எல்லா காலமும் சீரான ஆரோக்கிய உடலைப் பெறலாம்.

காரத் தன்மை அதிகம் கொண்ட சில உணவுகள்

  • சுத்தமான மண்பானைக் குடிநீர்
  • முளைகட்டிய பயறுகள்
  • பூசணிக்காய் ஜூஸ்
  • வாழைத் தண்டு சாறு
  • கொத்தமல்லி ஜூஸ்
  • அருகம்புல் ஜூஸ்
  • மற்ற இயற்கை உணவுகள், பழங்கள், காய்கறிகள்

இவற்றை தொடர்ந்து உட்கொள்ள எப்பேர்பட்ட அமிலத் தன்மைக் கொண்ட உடலும் விரைவில் ஆரோக்கியமாக மாறும்.

(1 vote)