Alangium salvifolium; அழிஞ்சல்
தமிழகத்தில் புதர்கள், வேலி ஓரங்களில் தானாக வளர்ந்திருக்கும் ஒரு முள் மரம் இந்த அழிஞ்சில். சிவப்பு, வெள்ளை, கருப்பு என பல வகைகளில் இந்த மரம் உள்ளது. இந்த மரத்தில் பழங்கள் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும், இதன் இலைகள் நீண்டு இருக்கும். பல வகைகளில் இருக்கும் இந்த மரத்தில் சிவப்பு நிற பூக்கள் இருக்கும் மரம் மருத்துவ பயன் கொண்டதாக உள்ளது. அழிஞ்சில் மரத்தின் இலை, விதை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவத்திற்கு உதவக்கூடியது.
அழிஞ்சில் வாந்தியை ஏற்படுத்தும் இந்த மூலிகை வயிற்றுப் பூச்சிகளை அழிக்கக்கூடியதாகவும், மலமிளக்கியாகவும், காய்ச்சலை அகற்றும் தன்மையும் கொண்டது. உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு மிக சிறந்த மருந்தாகவும் உள்ளது. சில நாட்கள் மட்டுமே இந்த மூலிகையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக நாட்கள் எடுத்துக் கொள்ள பல உடல் உபாதைகளையும், வாந்தி, வியர்வையையும் ஏற்படுத்தும்.
தோல் நோய்களுக்கு
பல நோய்களுக்கு நல்ல பலனை அளிக்கும் அழிஞ்சில் சருமத்தில் வரும் பல நோய்களுக்கு மிக சிறந்த பலனை அளிக்கிறது. அழிஞ்சில் விதை எண்ணெய்யை தோல் நோய்களுக்கு தடவிவர சரும நோய்கள் அகலும்.
கொடிய நோய்களுக்கு
அழிஞ்சில் மரப்பட்டை பொடியை சரியான அளவு சில நாட்கள் மட்டும் எடுத்துக் கொள்ள தொழுநோய், புண், கிரந்தி, விசக்கடிகளுக்கு சிறந்தது. மேலும் சிறிதளவு குறிப்பிட்ட நாட்கள் தேனில் இந்த பொடியை குழைத்து உண்பதால் தொழுநோய்க்கு நல்ல பலனைப் பெறலாம்.
கப நோய்களுக்கு
கிரந்தி, குன்மம் மற்றும் கப நோய்களுக்கு அழிஞ்சில் இலைகளை அரைத்து மிக மிக சிறிய அளவில் கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
தொழுநோய்க்கு சிறந்த மருந்தாக இந்த அழிஞ்சல் இலைகள் உள்ளது. கப நோய்களுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. நோய் நீக்கியாகவும், உடல் தேற்றியாகவும் உள்ளது. விஷக்கடி, தொழுநோய், கிரந்தி, புண், வயிற்றுப் போக்கு ஆகியவற்றிற்கும் மருந்தாக உள்ளது.