ஆவி பிடிப்பது எப்படி?

பொதுவாக ஆவி பிடிப்பது அல்லாது வேது பிடிப்பது என்பது நமது மரபு. இருமல், சளி போன்ற தொந்தரவுகளுக்கு நமது முன்னோர்கள் இந்த ஆவி பிடிக்கும் முறையை பயன்படுத்தி மிக எளிமையாக வீட்டிலேயே எந்த செலவும் இன்றி குணப்படுத்தினார். தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகளுக்கும் நெஞ்சு சளி, இருமலுக்கும் இந்த ஆவி பிடிப்பது சிறந்த பலனை அளிக்கும். மேலும் உடலில் வியர்வை துர்நாற்றம் உடல் துர்நாற்றம் போன்ற தொந்தரவுகள் நீங்கவும், சிறுநீரக தொந்தரவுகளால் உடலில் தேங்கும் உப்புக் கழிவுகளையும் வெளியேற்றவும் இது பெரியளவில் உதவுகிறது.

மிக எளிமையாக மூன்று முறையில் எவ்வாறு நமது வீடுகளில் நாமே இந்த ஆவி பிடிக்கும் முறையை செய்யலாம் என்று பார்க்கலாம். நமது வீட்டருகில் வேப்பமரம், நொச்சி போன்ற மூலிகைகள் இருந்தால் அவற்றைக்கொண்டு செய்யும் ஒரு முறையையும், வீட்டிலிருக்கும் கிராம்பு, பயன்படுத்திய எலுமிச்சம் பழத்தின் தோல் போன்று வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு எவ்வாறு செய்யலாம் என்ற முறையையும் பார்க்கலாம். மேலும் மற்றொரு முறை என்னவென்றால் எதுவுமே இல்லையா அல்லது எதுவுமே இல்லாமல் எவ்வாறு ஆவி பிடிப்பது என்பதுதான்.

இதில் குறிப்பிட்டிருக்கும் மூலிகைகள் மட்டுமில்லாமல் துளசி, கற்பூரவல்லி, தும்பை என மற்ற மூலிகைகளையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆவி பிடிப்பது என்றால் என்ன?

ஆவி பிடிப்பது என்பது உடலில் தேங்கி வறண்டு அடைத்துக்கொண்டிருக்கும் கழிவுகளை நீராவியால் இளக வைத்து வெளியேற்றுவது.

முதல் முறை

  • தண்ணீர் – 1/2 லிட்டர்

தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து அதாவது கொதி நிலைக்கு வந்த பின் அதனை கவனமாக நமது அருகில் வைத்துக்கொண்டு ஒரு போர்வையைக்கொண்டு தலை, முகத்தைப் போர்த்திக்கொள்ளவேண்டும். கொதித்த நீரிலிருந்து வரும் நீராவியை 10 முறை வாய்வழியாகவும், 10 முறை மூக்குவழியாகவும் உள்ளே இழுத்து விடவும்.

முறை இரண்டு

  • தண்ணீர் – 1/2 லிட்டர்
  • வேப்பிலைகள் – ஒரு கையளவு
  • நொச்சி இலைகள் – ஒரு கையளவு
  • யுக்களிப்டஸ் மர இலைகள் – சிறிது
  • மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் தூள் – சிறிது

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கொதிக்கவைத்து கொதிவந்தபின் அடுப்பை அணைத்து அதனை கவனமாக நமது அருகில் வைத்துக்கொண்டு ஒரு போர்வையைக்கொண்டு தலை, முகத்தைப் போர்த்திக்கொள்ளவேண்டும். கொதித்த நீரிலிருந்து வரும் நீராவியை 10 முறை வாய்வழியாகவும், 10 முறை மூக்குவழியாகவும் உள்ளே இழுத்து விடவும்.

முறை மூன்று

  • தண்ணீர் – 1/2 லிட்டர்
  • எலுமிச்சம் பழ தோல் – 2
  • மிளகு – 5
  • கல் உப்பு – சிறிது
  • கிராம்பு – 2
  • தோல் நீக்கி நசுக்கிய இஞ்சி – 1 துண்டு
  • மஞ்சள் தூள் – சிறிது

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கொதிக்கவைத்து கொதிவந்தபின் அடுப்பை அணைத்து அதனை கவனமாக நமது அருகில் வைத்துக்கொண்டு ஒரு போர்வையைக்கொண்டு தலை, முகத்தைப் போர்த்திக்கொள்ளவேண்டும். கொதித்த நீரிலிருந்து வரும் நீராவியை 10 முறை வாய்வழியாகவும், 10 முறை மூக்குவழியாகவும் உள்ளே இழுத்து விடவும்.

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

சளி, இருமல் அல்லது தொண்டை வலி போன்ற தொந்தரவுகள் இருந்தால் மேலே குறிப்பிட முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் ஆவி பிடிக்க சுவாசப்பாதை, மூச்சுக்குழாய், தொண்டைப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் நோய் தொற்றுகள் நீங்கும்.

தொற்று ஏற்பட்டிருக்கும் காலத்தில் நாளொன்றிற்கு இரண்டு அல்லது மூன்று ஆவி பிடிக்கலாம்.

(4 votes)