Capparis Zeylanica; Ceylon Caper; ஆதொண்டை
ஆதொண்டை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகை. இது ஒரு கொடி வகை மூலிகை. வேலிகள் மற்றும் பிற தாவரங்களின் மீது பற்றி வளரும் தன்மைக் கொண்டது. தனி இலைகள் மாற்றடுக்கில் முட்களுடன் இருக்கும். வெடித்து சிதறும் கனிகளும் அழகான மலர்களையும் கொண்டது.
கைப்பு சுவைக் கொண்ட இதன் இலை, காய், வேர், வேர்ப்பட்டை ஆகியன பயன்படும் பகுதிகள். காற்றொட்டி, காகதுரத்தி, ஆதண்டை, ஆதண்டம், ஆதொண்டன், ஆதொண்டம், காத் தொட்டி, காத்தோட்டி என பல பெயர்கள் இதற்கு உண்டு.
- ஆதொண்டை கீரையை நெய்யிட்டு வதக்கித் துவையலாகச் செய்து உணவுடன் சேர்த்து உண்டு வர ஜீரண மண்டலத்தில் வரும் பாதிப்புகள், மூக்கடைப்பு மறையும். பசியைத் தூண்டும் ஆற்றல் கொண்ட இந்த கீரை தொண்டைச்சளி, குடைச்சல், வாந்தி, கபநோய்கள், மூக்கடைப்பு, மண்டைக் குடைச்சல், அஜீரணம் ஆகியவற்றிற்கு மிக சிறந்த மருந்து.
- கசப்பு சுவைக் கொண்ட இந்தக் காயை சமைத்தோ அல்லது வற்றலாக்கி உணவில் சேர்த்தோ வர கபநோய்கள் பறந்தோடும்.
மூக்கடைப்பு, வாதக்குடைச்சல், தொண்டைக்கட்டு, மண்டைக்குடைச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு ஆதொண்டை வேரை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி தொடர்ந்து தலைமுழுகி வர நீங்கும். - ஆதொண்டை வேர்ப்பட்டை கசாயத்தை மூன்று வேளை எடுத்து வர பசியின்மை, சுவையின்மை, வாந்தி, மார்பு வலி தீரும்.
very nice information