aadu theenda palai, Worm Killer benefits in tamil

ஆடு தீண்டாப் பாளை – நம் மூலிகை அறிவோம்

Aristolochia Bracteata; Worm Killer; ஆடு தீண்டாப் பாளை

பூச்சிகளை வெளியேற்றும் சிறந்த மூலிகையாக இருக்கக் கூடியது இந்த ஆடு தீண்டாப் பாளை. புழுக்கொல்லி, ஆடு தின்னாப் பாளை, ஆடு தொடாப் பாளை, பங்கம்பாளை, விரணம் போக்கி, காரி ரத்தம் என பல பெயர்கள் இந்த மூலிகைக்கு உண்டு. கைப்பு சுவைக் கொண்ட இந்த ஆடு தீண்டாப் பாளை சமூலமே மருத்துவ பயன்கொண்டது.

இது ஒரு சிறுசெடி வகையைச் சேர்ந்த தாவரம். தரையோடு படர்ந்து வளரும் செடி இது, இதன் மலர்கள் சிவப்பு நிறத்தில், இலைகள் மாற்றடுக்கத்தில் சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் கனிகள் வெடித்து சிதறும் தன்மைக் கொண்டது. இதில் ஒருவித நெடி அளிக்கும் நறுமண எண்ணெய் உள்ளது.

aadu theenda palai, Worm Killer benefits in tamil

புழுக்கொல்லியாக பயனளிக்கும் சிறந்த ஆடு தீண்டாப் பாளை மூலிகை முடி உதிர்தல், வாதநோய்கள், படை, சொறி, சிரங்குகள், விஷக்கடிகள், பாம்பு விஷம், கருங்குஷ்டம், மலக் கிருமிகள், கரப்பான், சிலந்தி, குடற்புழுக்கள், பிரசவ வேதனை, சுகப் பிரசவம், மலச்சிக்கல், சூதகச் சிக்கல் ஆகியவற்றிற்கு மிக சறந்த பலனை அளிக்கும்.

முடி உதிர்தல் கட்டுப்பட

ஆடுதீண்டாப் பாளை இலை சிறிதளவு எடுத்து அரை லிட்டர் நீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி இரண்டு ஸ்பூன் வீதம் பருகிவர முடி உதிர்தல், கரப்பான், சிலந்தி ஆகியன மறையும்.

மலச்சிக்கல் நீங்க

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலுக்கும் சிறந்தது இந்த இலைகள். ஆடு தீண்டாப் பாளை இலையை அரைத்து குழந்தைகளின் வயிற்றில் பற்றுப் போட மலச்சிக்கல் நீங்கும்.

ஆடுதீண்டாப்பாளை தைலம்

சருமத்தில் ஏற்படும் நோய்கள், தொந்தரவுகளுக்கு ஆடுதீண்டாப் பாளை சமூலத்தை இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து பதமாகக் காய்ச்சி வடிகட்டி தேய்த்து வர சொறி, சிரங்கு, கரப்பான், கருங்குஷ்டம் ஆகியன நீங்கும்.

(1 vote)