6-months-baby-food-tamil

ஆறு மாத குழந்தையின் இணை உணவு

பிறந்த குழந்தைக்கான உணவுகளையும், ஆறு மாத குழந்தை உணவையும் தெரிந்து கொண்ட நாம் உலக சுகாதார நிறுவனம் குழந்தைகளுக்கு அளிக்கும் இணை உணவைப் பற்றி சில கட்டளைகளை வெளியிட்டுள்ளது. அவற்றைப் பார்க்கலாம்.

உலக சுகாதார நிறுவனம் ஆறு மாதம் முதல் குழந்தைக்கு கொடுக்கும் இணை உணவு சம்பந்தமான பத்து கட்டளைகள்

1. ஆறு மாத குழந்தைக்கு திட உணவுகள் தர ஆரம்பிக்க வேண்டும்.

2. இணை உணவுடன் தாய்ப்பாலும் இரண்டு வயது வரை அல்லது அதற்கு மேலாக தர வேண்டும்.

6-months-baby-food-tamil

3. ஒவ்வொரு தாயும் அன்பையும் அரவணைப்பையும் சேர்த்து அதாவது ஆங்கிலத்தில்  Responsive feeding முறையை அனுசரிக்க வேண்டும்.

4. சுத்தமான, சுகாதாரமான முறையில், கவனத்துடன் உணவு தயாரித்து பாதுகாக்கப்பட வேண்டும்.

5. குழந்தைக்கு தரப்படும் உணவின் அளவை மெல்ல அதிகரிக்க வேண்டும்.

6. குழந்தைக்கு அளிக்கப்படும் உணவின் தன்மையை தினம் தினம் மாற்றி பல வகையான உணவுகளை அளிக்க வேண்டும்.

7. குழந்தைக்கு அதிக முறை உணவு அளிக்க வேண்டும். இதை நிதானமாக அதிகரிக்க வேண்டும்.

8. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய உணவு வகைகளை அவரவர் குடும்ப வழக்கப்படி தர வேண்டும்.

9. உணவில் உள்ள உயிர் சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்களும், வைட்டமின்களும் நல் வாழ்விற்கு அவசியம்.

10. குழந்தைகள் நோய்வாய்ப்பட்டாலும் தாய்ப்பாலை நிறுத்தாமல் அடிக்கடி தர வேண்டும்.

(1 vote)