kambilippulu, 3g manure, ginger, garlic, green chilli manure, Organic Pest control, organic pest management

இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல்

தாவரப் பூச்சிக்கொல்லிகள் – இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை

இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல்

இரசாயன உரங்களால் உடல் ஆரோக்கியமும், மண்வளமும் பெரியளவில் பாதிப்படைவதுடன் சுற்றுசூழலும் மாசடைகிறது. இதற்கு சிறந்த மாற்றாக இயற்கை உரங்களும் இயற்கை பூச்சி விரட்டிகளும் உள்ளது.

இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல். இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம். இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும்.

kambilippulu, 3g manure, ginger, garlic, green chilli manure, Organic Pest control, organic pest management

ஐம்பது கிராம் பூண்டை 10 மில்லி மண்ணெண்ணெயில் ஒரு இரவு ஊற வைக்கவேண்டும். அடுத்த நாள் பூண்டின் தோலை நீக்கிவிட்டு பூண்டை அரைத்துக் கொள்ள வேண்டும்.

25 கிராம் பச்சை மிளகாயையும், 25 கிராம் இஞ்சியையும் தனித்தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொண்டு, இவை இரண்டையும் அரைக்கப்பட்ட பூண்டுடன் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் 3 லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதை தெளிப்பதற்கு முன்பு நன்றாக கலந்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

கட்டுப்படும் பூச்சிகள்

காய்த்துளைப்பான், கம்பளிப்புழு, இலைத்துளைப்பான், நுனிக்குருத்துப்புழு, படைப்புழு, அசுவினி

இதனை பயன்படுத்தும் முன் ஓட்டும் திரவமான காதி சோப்புக் கரைசலைப் பயன்படுத்தவேண்டும். காதி சோப்பினை ஒரு இரவு தண்ணீரில் ஊறவைத்து அதனோடு இந்த கரைசலையும் சேர்த்து, அதாவது ஒரு லிட்டர் காதி சோப்பு கரைசலுடன் 4 மிலி இந்த கரைசலை நன்கு கலந்து செடிகளுக்கு தெளிக்கவேண்டும்.

இந்த காதி சோப்பு ஓட்டும் கரைசலை பயன்படுத்தினால் தான் நாம் தயாரித்த இந்த தாவர கரைசல் இலைகளின் மேல் நன்றாக ஒட்டிக்கொண்டு சிறந்த பயன்தரும். மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு

(8 votes)