விநாயகர் சதுர்த்தி – வழிபாடு செய்யும் 21 மலர்கள்

விநாயகர் சதுர்த்தி – 21 மலர்கள்

வாழ்க்கையில் வளத்தையும், செழிப்பையும், சௌபாக்கியத்தையும் அளிக்கக்கூடிய இறைவன் வினைதீர்க்கும் கணபதி. முன்முதற் கடவுளான விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி தினத்தன்று படைத்து வழிபட உகந்த சில மலர்களை இந்த தொகுப்பில் பார்ப்போம். விநாயகர் நம்முடைய கஷ்டங்களையும் கர்ம வினையையும் களைபவராக திகழ்பவர். நமது இன்னல்களை நீக்குபவராக திகழ்பவர்.

This image has an empty alt attribute; its file name is 21-leaves-vinayagar-chaturthi-ganesa-pooja-leaves-pillaiyar-21-ilaigal.gif

நம்மை பேணிகாத்து அனைத்திலும் வெற்றியை அளிக்கும் விநாயகருக்குஉகந்த ஒரு நாள் விநாயகர் சதுர்த்தி. இந்த விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை இருபத்தி ஒரு இலைகள், இருபத்தி ஒரு மலர்கள், இருபத்தி ஒரு பழங்களை வைத்து வழிபட நம்முடைய பாவங்கள் நீங்கி நம்முடைய தோஷங்கள் நீங்கி சகல விதமான சௌபாக்கியங்களையும் பெறமுடியும்.

நமது முன்னோர்கள் நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொரு மூலிகைகள், மலர்கள், கொடிகள் அனைத்துமே நமது ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் அதிகரிக்கக் கூடியது என்பதை தெரிந்துக்கொண்டு அவற்றை நாம் மறவாமல் பயன்படுத்தவும், அடையாளம் காணவும் கடவுளின் பெயரைக்கொண்டும், சடங்குகள், பூஜைகள் எனவும் வகுத்து பயனடைய இறைவழிபாடை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் நம்மை சுற்றி இருக்கும் மிக முக்கிய மலர்கள், விநாயகருக்காக படைக்கப்படும் மலர்கள் இவை.

விநாயகருக்கு உகந்த இந்த மலர்கள் வைத்து விநாயகரை வழிபட நம்முடைய கஷ்டங்கள் நீங்கி மன அமைதி, ஆரோக்கியம், சகல சௌபாக்கியங்களையும் பெற முடியும். 21 மலர்களை இனி பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்தி – வழிபாடு செய்யும் 21 இலைகள்

  • மல்லி
  • முல்லை
  • ஜாதிமல்லி

  • சாமந்தி
  • சம்பங்கி
  • தாமரை

  • செண்பகம்
  • பாரிஜாதம் / பவளமல்லி
  • ஆரளி

  • வில்வ பூ
  • மனோரஞ்சிதம்
  • தும்பைப்பூ

  • எருக்கம்பூ
  • தாழம்பூ
  • மாதுளம்பூ

  • மாம்பூ
  • செம்பருத்தி பூ
  • ரோஜா

  • நந்தியாவட்டை
  • ஊமத்தை பூ
  • கொன்றை மலர்

நூற்றுக்கும் மேற்பட்ட மலர்கள் நமது இலக்கியங்களில் இருந்தாலும் அவற்றில் மிக குறிப்பாக இந்த இருபத்தி ஒரு மலர்களை கொண்டு பூஜிக்க விநாயகரின் பேராற்றல் நமக்கு கிடைக்கும். இந்த மலர்களைக் கொண்டு விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று வழிபட வாழ்வில் சந்தோஷம் பெருகும்.

(13 votes)