banana leaf food, food types in tamil, traditional food method, Health n organics tamil, parampariya unavu

12 வகை உணவு பழக்கம்

நம் முன்னோர் கற்றுக்கொடுத்த 12 வகை உணவு பழக்கம்.

பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் அறுசுவை உணவும், 12 வகையான உணவுப் பழக்கங்கள் இருந்துள்ளது. ஒவ்வொரு உணவையும் ஒவ்வொரு விதத்தில் உட்கொள்ள சீரான செரிமானம் ஏற்படுவதுடன் உடல் ஆரோக்கியம் மேம்படும். சரி அப்படி உட்கொள்ளும் உணவை எவ்வாறு பிரித்து புரிந்து அழைப்பது என்று பார்ப்போம்.

banana leaf benefits, valai illai payanpagal, maruthuvagunangal, six taste, arusuvai, traditional knowledge

1 . அருந்துதல் — மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

2 . உண்ணல் — பசி தீர சாப்பிடுவது.

3 . உறிஞ்சுதல் — நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.

4 . குடித்தல் — நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.

5 . தின்றல் — பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.

6 . துய்த்தல் — உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

7 . நக்கல் — நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.

8 . பருகல் — நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

9 . மாந்தல் — ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.

10 . கடித்தல் — கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.

11. விழுங்கல் — வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

12. முழுங்கல் — முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.

(9 votes)