மூடாக்கு / Mulching

மூடாக்கு என்றவுடன் ஏதோ புதிதாக இன்று கண்டுபிடிக்கப்பட்டது நினைக்க வேண்டாம்.. மூடாக்கு என்றால் என்ன என்பதை அன்றாடம் நடக்கும் நிகழ்விலிருந்து எளிமையாக மூடாக்கு என்றால் என்ன? என்ற பகுதியிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம்.

எவ்வாறு மண்புழுக்கள் செடிகளின் வளர்ச்சிக்கும், மண்ணின் வளத்திற்கும் உதவுகிறதோ அதேபோல் இந்த மூடாக்கு செடிவளச்சிக்கும், தோட்டத்திற்கும் அவசியமானது.

மண்ணை மூடுவதால் மண்ணிலிருந்து ஆவியாகும் நீரும் சேமிக்கப்படுகிறது, நிலத்தடி நீரும் சேமிக்கப்படுகிறது. சிக்கனமான நீர் வரும்கால உணவு தட்டுப்பாடையும் குறைக்கும். ஆரோக்கியமான உணவிற்கும் உத்திரவாதமளிக்கும், உணவு இறக்குமதியினை குறைத்து ஆரோக்கியமான வாழ்வையும் அளிக்கும். 

மூடாக்கினால் கிடைக்கும் நன்மைகள்..

  • மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும்.
  • நீரின் அளவு குறையும்.
  • மண்ணின் தட்பவெப்பநிலை காக்கப்படும். (வெயில்காலத்திலும்)
  • மண்ணை மூட, மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்கள், மண்புழுக்களுக்கு அவை சிறந்த கூடாரமாக அமையும். 

  • மண்ணிலிருக்கும் நுண்ணுயிர்களுக்கும், மண்புழுக்களுக்கும் எளிதாக உணவு கிடைக்கும்.
  • மண் வளமாகும்.
  • பழுத்த இலைகள் சிதைந்து மக்கு உரமாகி நேரடியாக செடிகளுக்கு கிடைக்கப்பெறும்.

  • செடி, கொடி, மரங்கள் செழிப்பாக இருக்கும்.
  • மண்ணிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் எளிதாக கிடைக்கப்படும்.
  • களைச்செடிகளை வளரவிடாது.
  • பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

  • மண்ணரிப்பு தடுக்கப்படும். (மழைக்காலங்களில் தொட்டிகளில் அல்லது நிலத்தில் இருந்து மண் தெறித்து வெளியேறுவது தடுக்கப்படும்). 
  • பழுத்த இலைகளிலிருந்து கரிம சத்துக்கள் அதிகம் மண்ணிற்கு கிடைக்கும்.

மூடாக்கிற்கு எவையெல்லாம் பயன்படும்?

இலைதழை, கரும்பு சக்கை, மர துகள்கள், காய்கறி கழிவுகள், வெங்காயம் பூண்டு தோல்கள், தேவையற்ற புற்கள், வைக்கோல், தென்னைமட்டைகள் (சிறிதாக நறுக்கியது), காகிதங்கள் என அனைத்து மக்கக்கூடிய பொருட்களையும் கொண்டு மூடாக்கு இடலாம்.

இன்று செயற்கையாக பிளாஸ்டிக் ஷீட்களைக்கொண்டும் மூடாக்கு இடப்படுகிறது. இவற்றால் மண் மீண்டும் சூடாவதுடன் மண்புழுக்களை அவை அளிக்கிறது. இவை மீண்டும் மண்ணில் மக்காமல் தேவையற்ற கழிவுகளாக மீண்டும் சுற்றுசூழலிலும், மண்ணிலும் சேர்க்கிறது. இவ்வாறான செயற்கை மூடாக்குகளை தவிர்ப்பது சிறந்தது.

இன்று செயற்கையாக பிளாஸ்டிக் ஷீட்களைக்கொண்டும் மூடாக்கு இடப்படுகிறது. இவற்றால் மண் மீண்டும் சூடாவதுடன் மண்புழுக்களை அவை அளிக்கிறது. இவை மீண்டும் மண்ணில் மக்காமல் தேவையற்ற கழிவுகளாக மீண்டும் சுற்றுசூழலிலும், மண்ணிலும் சேர்க்கிறது. இவ்வாறான செயற்கை மூடாக்குகளை தவிர்ப்பது சிறந்தது.

எவ்வாறு மூடாக்கு போடுவது?

பெரிய மரங்களாக இருந்தால் மரத்தினை சுற்றி மூன்று அடிக்கு இலைதழை, வைக்கோல், கரும்பு சக்கை போன்றவற்றை நான்கு அல்லது ஐந்து இன்ச் அடர்த்திக்கு போடவேண்டும். அவ்வளவு தான்.

நிலத்தில் இருக்கும் செடிகளுக்கு அவற்றை சுற்றி ஒரு அடிக்கு மக்கும் குப்பைகளைக் கொண்டு மண்ணை மூடும் அளவு போடவேண்டும். 

தொட்டியில் விதைத்தபின் மண்ணை மூடும் அளவிற்கு மக்கும் குப்பைகளைக் கொண்டு மூடாக்கு இடவேண்டும். அதேபோல் நாற்று நட்டபின், செடிகளை சுற்றி மண்ணை மூடும் அளவிற்கு மக்கும் குப்பைகளை இடவேண்டும். தேவைக்கேற்றவாறு அவ்வப்பொழுது மாதம் இரண்டுமுறை இந்த மூடாக்கினை இடலாம்.

(2 votes)