குழந்தையின்மையை போக்கும் சிறந்த பானம் இந்த கம்பு பானம். ஆண்கள், பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்கும் தன்மை இந்த பானத்திற்கு உண்டு.
உடலுக்கு தேவையான பல சத்துக்களையும் உயிர்சத்துக்களையும் அதிகம் கொண்டிருக்கும் சிறந்த சிறுதானிய வகையை சேர்ந்த தானியம் நம் நாட்டுக் கம்பு.
தேவையான பொருட்கள்
- 50 கிராம் நாட்டு கம்பு
- 1 துண்டு வெல்லம் / கருப்பட்டி
- சிறிதளவு தேங்காய்
செய்முறை
- நாட்டுக் கம்பை நன்கு அலசி பத்து மணி நேரம் நீரில் ஊறவைக்க வேண்டும்.
- பின் ஊறிய கம்பை நீரிலிருந்து எடுத்து முளைகட்ட வேண்டும்.
- ஒரு துணியில் கட்டி காற்றோட்டமான இடத்தில் முளைகட்ட வைக்கலாம்.
- சிறிதாக நன்கு முளைத்த கம்பினை எடுத்துக்கொண்டு அதனுடன் வெல்லம் அல்லது கருப்பட்டி, தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.
- அரைத்த கம்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வடிக்கட்டவும்.
- சுவையான கம்பு ஜூஸ் ரெடி.
- சற்று சூடாக குடிக்க விரும்புபவர்கள் லேசாக தண்ணீரை சூடுபடுத்தி சேர்க்கவும்.
கம்பு ஜூஸ்
குழந்தையின்மையை போக்கும் சிறந்த பானம் இந்த கம்பு பானம். ஆண்கள், பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்கும் தன்மை இந்த பானத்திற்கு உண்டு. உடலுக்கு தேவையான பல சத்துகளையும் உயிர்சத்துக்களையும் அதிகம் கொண்டிருக்கும் சிறந்த சிறுதானிய வகையை சேர்ந்த தானியம் நம் நாட்டுக் கம்பு.
⏲️ ஆயத்த நேரம்
24 hrs
⏲️ தயாரிக்கும் நேரம்
5 mins
🍴 பரிமாறும் அளவு
1
🍲 உணவு
ஜூஸ்
தேவையான பொருட்கள்
- 50 கிராம் நாட்டு கம்பு
- 1 துண்டு வெல்லம் / கருப்பட்டி
- சிறிதளவு தேங்காய்
செய்முறை
- நாட்டுக்கம்பை நன்கு அலசி பத்துமணி நேரம் நீரில் ஊறவைக்கவேண்டும்.
- பின் ஊறிய கம்பை நீரிலிருந்து எடுத்து முளைகட்டவேண்டும்.
- ஒரு துணியில் கட்டி காற்றோட்டமான இடத்தில் முளைகட்ட வைக்கலாம்.
- சிறிதாக நன்கு முளைத்த கம்பினை எடுத்துக்கொண்டு அதனோடு வெல்லம் அல்லது கருப்பட்டி, தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.
- அரைத்த கம்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வடிக்கட்டவும்.
- சுவையான கம்பு ஜூஸ் ரெடி.
- சற்று சூடாக குடிக்க விரும்புபவர்கள் லேசாக தண்ணீரை சூடுபடுத்தி சேர்க்கவும்.