Egg Amino Acid Preparation in Tamil
இயற்கை உரம் தயாரிக்கும் முறை
- இயற்கை விவசாயம் / மாடித் தோட்டம் ஆகியவற்றில் செடிகள்/ பயிர்களின் வளர்ச்சி ஊக்கியாக உள்ளது இந்த முட்டை ரசம் எனப்படும் முட்டை எலுமிச்சை கரைசல்.
- செடிகள் / பயிர்களின் நுண்ணூட சத்துகளை அதிகரிக்க இந்த கரைசல் பயன்படும்.
- பயிர் / செடிகளில் இலைகள் வெளுத்துப்போவதை தடுக்கவும் உதவுகிறது.
- சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும், மண்ணை வளப்படுத்தவும் உதவுகிறது.
முட்டை ரசம் தயாரிக்க தேவையானவை
- முட்டை – 10
- எலுமிச்சை பழம் – 20
- பனை வெள்ளம் அல்லது நாட்டு சக்கரை – 250 கிராம்
முட்டை ரசம் தயாரிக்கும் முறை
- மூடியுள்ள பிளாஸ்டிக் டப்பா அல்லது பத்திரத்தை எடுத்துகொள்ளவேண்டும். பாத்திரத்தில் பத்து முட்டைகளை குறுகிய முனை கீழிருக்குமாறு ஓட்டுடன் அப்படியே அடுக்கி வைக்கவேண்டும். (முட்டை ஓடுகள் உடையாமல் முழுமையாக இருக்க வேண்டும்).
- இந்த முட்டைகள் மூழ்குமளவிற்கு எலுமிச்சை சாற்றினை விட பிழிந்து விட வேண்டும். அதனுடனேயே எலுமிச்சை பழ தோலையும் சேர்த்து கலந்து காற்றுபுகாமல் டப்பாவை இறுக்கி மூட வேண்டும். இதனை 1௦ நாட்கள் அப்படியே வைக்கவேண்டும்.
- பத்து நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சைப் பழ தோலில் உள்ள வீரியம் முட்டை ஓடுகளை கரைத்துவிடும். முட்டை கூழ் வடிவில் மாறிவிடும். முட்டையை அழுத்திப் பார்த்தால் முட்டை ரப்பர் பந்து போல் மிருதுவாக இருக்கும்.
- இதிலிருக்கும் முட்டையை மட்டும் எடுத்து பிசைந்து கூழாக்கிக் கொள்ளவேண்டும்.
- இதனை மீண்டும் அந்த எலுமிச்சை சாறில் சேர்த்து அதனுடன் கால் கிலோ வெல்லம் சேர்த்து மீண்டும் டப்பாவை மூடி 2௦ நாட்கள் மூடி வைக்க வேண்டும். இதிலிருக்கும் வாயுக்கள் வெளியேற இதன் மூடியில் சிறிது துளையிட்டு வைக்க வேண்டும்.
- இருபது நாட்கள்க்குப் பின் திறந்து பார்த்தால் முட்டை ரசம் தயார்.
முட்டை ரசம் பயன்படுத்தும் முறை
- தயாரான முட்டை ரசத்தை வடிகட்டி பத்து லிட்டர் தண்ணீருக்கு இருநூறு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம்.
- இந்த கரைசலை பாட்டில்களில் அடைத்துவைத்து மூன்று மாத காலம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
முட்டை ரசம் பயன்கள்
- சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி.
- பூக்கள் காய்கள் அதிகரிக்கும். நல்ல மகசூலை அளிக்கும்.
மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு