பலவருடங்களாக நிலத்தை வீணாக அப்படியே போட்டுவிட்டோம்.. இந்த நிலம் விவசாயம் செய்ய தற்பொழுது பயன்படுத்தமுடியுமா? அது சாத்தியமா? அல்லது இரசாயன உரம், வேதி உப்புகள், இரசாயன பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தொடர்ந்து நிலத்தில் இட்டதால் நிலம் பாழாகிவிட்டது.. இனி இந்த நிலத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தமுடியுமா?
இயற்கை விவசாயம் இந்த நிலத்தில் செய்ய முடியுமா? முடியும் என்னும் பலர், நிலத்தை தயார் செய்ய மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகும் என்கின்றனர் அது உண்மையா? இந்த நிலத்தில் விவசாயம் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பல கேள்விகள் பலருக்கும் உள்ளது.
எவ்வளவு தான் நிலம் பாழாக இருந்தாலும் அதனை ஆறே மாதத்தில் புதுப்பித்து புத்துயிர் செய்ய முடியும். பின் அந்த நிலத்தில் எல்லா பயிர்களையும் சாகுபடி செய்ய முடியும்.
எப்படி நிலத்தை பக்குவப்படுத்தி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
பல பயிர் சாகுபடி முறையை பயன்படுத்தி எளிமையாக நிலங்களை பக்குவப்படுதல்லாம். பொதுவாக ஒரே வகை பயிர்களை பயிர் செய்து வரும் பொழுது பொதுவாகவே மண்ணில் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதற்காக பாரம்பரியமாக நமது முன்னோர்கள் ஒரு தழை எருச் செடியை வளர்த்து நிலத்தில் மடக்குவது அல்லது தக்கைப்பூண்டு, சணப்பு, நரிப்பயறு, கொளுஞ்சி போன்ற செடிகளை இடத்திற்கும் மண்ணிக்கும் ஏற்றாற்போல் பயிர்செய்து மடக்குவது காலமாகவே நமது முன்னோர்களின் நடைமுறையில் இருந்த ஒரு பழக்கம்தான்.
இதே முறையைப் பின்பற்றி தான் இன்று பாழாய் போன நிலத்தை மேம்படுத்த உள்ளோம்.
உரச் செடிகளை வளர்த்து தழை உரமாகப் பயன்படுத்துவது பற்றி பார்த்தோம். இப்படி சிலவகைக் செடிகளை நிலத்திற்கு அளித்து எருவாக்கும் போது சில வகை ஊட்டங்களையே மண்ணில் சேர்க்க முடியும். நில வளத்தை முழுமையாக்க இது போதாது. பல வகை விதைகளையும் விதைத்து, வளர்த்து நிலத்தில் சேர்க்கும் போது பல வகை ஊட்டங்கள் மண்ணில் சேர்கிறது, வளம் கூடுகிறது. இதை இயற்கை விவசாயிகள் தமது நேரடி அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளனர்.
இதற்கு நாம் பின்பற்றும் முறை பல பயிர் விதைப்பு அல்லது பல பயிர் சாகுபடி முறை. பல பயிர் விதைப்பு என்பது நான்கு தானியங்கள், நான்கு பயறு வகைகள், நான்கு பசுந்தாள் உரச்செடிகள், நான்கு எண்ணெய் வித்துக்கள், நான்கு வாசனைப் பியர்கள் என 20 வகை பயிர்களை விதைத்து 50 நாட்கள் வளர்த்து மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் முறையாகும்.
இப்பயிர்களின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள பல வகை நுண்ணூட்டங்களில் மண்ணில் சேர்ந்து மண்ணை வளம் செய்வதுடன் இவைகளே மக்கி எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன.
பல பயிர் வதைகள்
தானிய விதைகள் சோளம் – 1 கிலோ, கம்பு – 500 கிராம், தினை – 250 கிராம், சாமை – 250 கிராம், வரகு – 300 கிராம், குதிரை வாலி – 250 கிராம், பனிவரகு – 200 கிராம் போன்றவற்றில் ஏதேனும் நான்கு;
பயிறு வகை பயிர்கள் பாசிப்பயிறு – 2 கிலோ , உளுந்து – 2 கிலோ, கொள்ளு – 1 கிலோ, தட்டைப் பயிறு – 2 கிலோ, துவரை – 1 கிலோ, போன்றவற்றில் ஏதேனும் நான்கு.
எண்ணெய் வித்துக்கள் எள் – 250 கிராம், நிலக்கடலை – 2 கிலோ, ஆமணக்கு – 3 கிலோ, சூரியகாந்தி – 1 கிலோ, துவரை – 1 கிலோ, சோயா – 2 கிலோ போன்றவற்றில் ஏதேனும் நான்கு.
வாசனைப் பொருட்கள் சோம்பு – 100 கிராம், கடுகு -100 கிராம், வெந்தையம் -100 கிராம், மல்லி – 1 கிலோ
உரச்செடிகள் சணப்பு – 2 கிலோ, அவுரி – 1 கிலோ, தக்கை பூண்டு – 1 கிலோ, கொளுஞ்சி – 1 கிலோ, அகத்தி – 1 கிலோ, செம்பை – 1 கிலோ போன்றவற்றில் ஏதேனும் நான்கு.
மேற்கண்ட வகைகளில் ஒவ்வொன்றிலும் ஏதேனும் நான்கு விதைகள் வீதம் ஏக்கருக்கு 20 கிலோ தேவைப்படும். இந்த 20 வகை விதைகளையும் சேர்த்து ( 20 கிலோ இருந்தாலும் தவறல்ல) விதைத்து 20 நாட்களில் உழுது நிலத்தில் மடக்க வேண்டும்.
பின்பு மீண்டும் 20 வகை பயிர்களை விதைத்து வளர்த்து 60 நாட்களில் மடக்கி உழவு செய்ய வேண்டும் அதனை அடுத்து மீண்டும் 20 வகை பயிர்களை விதைத்து 90 நாட்களுக்குப் பின் விதைகள் முற்றிய பிறகு நிலத்தில் மடக்கி உளவு செய்ய வேண்டும். இதன் மூலம் 50 ஆண்டுகளாக கெட்டு இருந்த, பாழாய்ப்போன நிலத்தை ஆறு மாதத்தில் மீது எடுக்க முடியும்.
மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு