இயற்கை உரம் தயாரிக்கும் முறை – இயற்கை வளர்ச்சி ஊக்கி
இயற்கை விவசாயம், வீட்டுத் தோட்டம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிகளை விரட்டும் பூச்சி விரட்டியாகவும், பூ உதிர்தலை தடுத்து பாதுகாக்கும் இயற்கை உரமாகவும் இருக்கக்கூடியது அரப்பு மோர் கரைசல்.
மிக எளிமையாக இதனை தயாரித்து பயன்படுத்தலாம்.
அரப்பு மோர் கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்
- அரப்பு இலைகள் / உசில மர இலைகள் – 1 கிலோ
- புளித்த மோர் – 2.5 லிட்டர்
- மண்பானை / பிளாஸ்டிக் வாளி
அரப்பு மோர் கரைசல் தயாரிக்கும் முறை
கிராமங்களில் சாதாரணமாக கிடைக்கும் அரப்பு இலைகள் என்று கூறப்படும் உசில மர இலைகளை பறித்துக்கொண்டு அதனுடன் நீர்சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவேண்டும். இதனுடன் புளித்த மோரினையும் ஒரு மண்பானையில் சேர்த்து 7 நாட்கள் வைக்கவும்.
இதனுடன் ஒரு இளநீர், அரை கிலோ அழுகிய பழங்களையும் சேர்க்கலாம். தேமோர் கரைசல் 2 கூறியதைப்போலும் செய்யலாம்.
இவை ஒரு வாரத்தில் நன்கு நொதித்த பின் எடுத்து வடிகட்டி செடிகளுக்குப் பயனபடுத்தலாம். அரப்பு மோர் கரைசல் தயார்.
அரப்பு மோர் கரைசல் பயன்படுத்தும் முறை
ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளுக்கு / பயிர்களுக்கு தெளிக்கலாம்.
அரப்பு மோர் கரைசல் பயன்கள்
பயிர்கள், செடிகள் பூச்சி நோயிலிருந்து பாதுகாக்கப்படும்.
பூ பிடிக்கும் பருவத்தில் தெளிக்க பயிர் வளர்ச்சி அதிகரிக்கும், பூக்கள் உதிராமல் பாதுகாக்கும். பூக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.
மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு