உடல் சூட்டை குறைக்க சிறந்த துவையல். சுண்ணாம்பு சத்துக்கள் உட்பட பல பல சத்துக்கள் நிறந்த துவையல். எலும்புகள் பலப்பட அவ்வப்பொழுது இதனை உணவோடு உட்கொள்ள ஆரோக்கியம் மேம்படும்.
தேவையான பொருட்கள்
- 2 ஸ்பூன் வெந்தயம்
- 5 – 7 வர மிளகாய்
- நெல்லிக்காய் அளவு புளி
- சிறிதளவு வெல்லம்
- 2 – 3 நல்லெண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயத்தைப் பதமாக வறுத்து எடுக்கவும். அதிகம் வறுத்துவிட்டால் கசந்துவிடும். எனவே லேசாக வறுத்தெடுக்கவும்.
- அதனோடு வர மிளகாயையும், புளியையும் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- இவை அனைத்தையும் மிக்ஸ்யில் சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும்.
- கடைசியாக சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
- வெந்தயத் துவையலை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தேவைக்கேற்பசேர்த்து கலந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
- இந்த துவையலை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு, அஜீரணம் போன்றவற்றிற்கு நல்ல குணம் கிடைக்கும்.
வெந்தயத் துவையல்

⏲️ ஆயத்த நேரம்
5 mins
⏲️ சமைக்கும் நேரம்
5 mins
🍴 பரிமாறும் அளவு
2
🍲 உணவு
துவையல்